இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், தோனி, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா என மூன்று நட்சத்திரங்கள் பற்றியான கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்.
சஞ்சு சாம்சன் நேற்று ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பொழுது, அவரிடம் இந்திய நட்சத்திர வீரர்கள் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டது, அதற்கு பதில் அளித்து பேசிய சஞ்சு சாம்சன் சில சுவாரசிய பதில்களை கூறியிருக்கிறார்.
கம்பீர் காட்டும் ஆதரவு
கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு வருவதற்கு முன்பாகவே சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணிக்குதான் நஷ்டம் அவருக்கு கிடையாது என கூறியிருந்தார். இதை செயல்படுத்தி காட்டும் விதமாக தற்பொழுது டி20 அணியில் அவரை துவக்க வீரராகவும் பயன்படுத்தினார்.
இதை சிறப்பாக பயன்படுத்திய சஞ்சு சாம்சன் பங்களாதேஷ் அணிக்கு எதிராக அதிரடியாக டி20 கிரிக்கெட்டில் சதமும் அடித்தார். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இந்திய வெள்ளைப்பந்து அணியில் சஞ்சு சாம்சனின் இடம் உறுதியாகி கொண்டே வருகிறது. இதற்கு கம்பீர் கொடுக்கும் ஆதரவு மிக முக்கியமானது.
தோனிக்கு திட்டம் தீட்டும் பொழுது…
இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சியில் பேசிய சஞ்சு சாம்சன் ” நாங்கள் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடுவதற்கு திட்டம் தீட்டும் பொழுது மகேந்திர சிங் தோனியின் பெயர் வந்தால், அவரை அப்படியே விட்டு விடுங்கள் அடுத்த வீரர் பற்றி பேசலாம் என்று நகர்ந்து விடுவோம். காரணம் என்னவென்றால் தோனிக்கு எதிராக திட்டங்கள் தீட்டுவது மிகவும் கடினமானது”
இதையும் படிங்க : ரோகித்துக்கு ரிஷப் பண்ட்டை பத்தி தெரியாது.. அவர் அபூர்வமானவர்.. அவர் இப்படிதான் – அஜய் ஜடேஜா கருத்து
“இதேபோல் தற்போது கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த கவர் டிரைவ் வைத்திருக்கக்கூடிய வீரர் என்றால் அது விராட் கோலிதான். அதேபோல மிகச் சிறந்த புல் ஷாட் விளையாடக்கூடிய வீரர் என்றால் அது கேப்டன் ரோகித் சர்மாதான்” என்று பதில் அளித்து இருக்கிறார்.






