ரோகித் கேப்டனா அஸ்வின் வரை நிறைய தப்பு செஞ்சிட்டார்.. எனக்கு பாக்கவே ஆச்சரியமா இருந்தது – மஞ்ச்ரேக்கர் விமர்சனம்

0
83
Rohit

நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்விக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் திட்டரீதியான சிந்தனைகள் தான் முக்கிய காரணமாக இருந்தது என சஞ்சய் மஞ்சுரேக்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் ரோஹித் சர்மா இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களை மட்டும் அணியில் சேர்த்தது, மேலும் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது என இந்த டெஸ்ட் போட்டியில் அவர் மீது நிறைய விமர்சனங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரச்சின் ரவீந்தரா – டிம் சவுதி

இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணியை 300 ரன்கள் கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்பு இந்திய அணிக்கு இருந்தது. இந்த நிலையில் ரச்சின் ரவீந்தரா மற்றும் டிம் சவுதி இருவரும் இணைந்து 137 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க, நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவித்து விட்டது.

- Advertisement -

இந்த இடத்தில் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியதில் கேப்டன் ரோஹித் சர்மா மீது விமர்சனங்கள் இருக்கிறது. குறிப்பாக அந்த அவசர சூழலை பயன்படுத்திக்கொள்ள வேகப் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தாதது, களத்தடுப்பு வியூகம் ஆகியவற்றில் தவறு செய்து இந்திய அணி நல்ல வாய்ப்பை தவற விட்டு விட்டது.

ரோகித் சர்மா தந்திரோபாய தோல்வி

இதுகுறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறும் பொழுது “ஃபாஸ்ட் பவுலர்கள் மூலம் விக்கெட் கிடைக்கலாம் ஆனால் எட்ஜ் மூலம் ரன்கள் சென்று கொண்டிருந்தது. எனக்கு இன்று மிக ஆச்சரியமாக இருந்த விஷயம் என்னவென்றால், பும்ரா முதல் ஆறு ஓவர்கள் பெரிய ஸ்பெல் வீசியபோது, சரியாக வீசாத சிராஜும் தொடர்ந்து ஆறு ஓவர்கள் வீசினார். ரோகித் சர்மாவின் இந்த முடிவு எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது”

இதையும் படிங்க : நியூசி கடைசி 2 டெஸ்ட்..இந்திய அணி அறிவிப்பு.. தமிழக வீரர் சேர்ப்பு.. காரணம் என்ன? – வெளியான தகவல்கள்

“இதில் இன்னொரு பெரிய தவறு அஸ்வின் வடிவத்தில் இருந்தது. அவரை ரோகித் சர்மா புதிய பந்தில் பும்ராவுடன் சேர்த்து பந்து வீச வைத்திருக்க வேண்டும். நிச்சயமாக நியூசிலாந்து பேட்டர்களுக்கு அவர்கள் இருவரும் கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருப்பார்கள். குறைந்தபட்சம் 4 ஓவர்கள் முடிந்த பிறகாவது அஸ்வின் வந்திருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -