இந்திய அணி தோல்வி.. WTC புள்ளி பட்டியலில் முக்கிய மாற்றம்.. பைனலுக்கு போக என்ன நடக்க வேண்டும்?

0
30
WTC

இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டிகள் தோற்ற பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஒரு முக்கிய மாற்றம் நடைபெற்றிருக்கிறது.

இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இலங்கை அணி இடம் இரண்டு டெஸ்ட் போட்டிகளை தோற்று வந்த நியூசிலாந்து அணி இந்திய அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி இருக்கிறது.

- Advertisement -

மீண்டும் பைனல் வாய்ப்பில் நியூசிலாந்து

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி கொண்டு வருகின்றன. தற்பொழுது இதில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை.

அதே சமயத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்புகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய அணியாக நியூசிலாந்து இருந்து வந்தது. பிறகு அந்த அணி தொடர் தோல்விகளை சந்திக்க அந்த இடத்தை இலங்கை தற்போது கைப்பற்றி இருக்கிறது. இப்போது இந்த வெற்றியால் நியூசிலாந்து அணி மீண்டும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கான ஒரு சிறிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

போட்டியிடும் இலங்கை நியூசிலாந்து அணிகள்

நியூசிலாந்து அணி இந்த வெற்றியால் புள்ளி பட்டியலில் இங்கிலாந்து அணியை தாண்டி நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த அணியின் வெற்றி சதவீதம் 44.44 என்று இருக்கிறது. இலங்கை அணி தற்பொழுது 55.56 என்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது. மேற்கொண்டு இந்திய அணியை நியூசிலாந்து அணி வெல்லும் பொழுது, அது இந்திய அணிக்கு பெரிய பாதிப்பையும் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிக்கு இறுதிப் போட்டிக்கான வாய்ப்பையும் அதிகரிக்கும். மேலும் இந்திய அணி அடுத்த நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளையும் ஆஸ்திரேலியாவில் சென்று ஒன்று இரண்டு போட்டிகளையும் வெல்வது பைனலுக்கு செல்ல வழிவகுக்கும்.

இதையும் படிங்க : முதல் மேட்ச் தோல்வி.. இனி இங்கிலாந்து அணிக்கு செஞ்சததான் நியூசிக்கும் பண்ண போறோம் – ரோகித் சர்மா பேட்டி

2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்:

இந்தியா – 68.06
ஆஸ்திரேலியா – 62.50
இலக்கை – 55.56
நியூசிலாந்து – 44.44
இங்கிலாந்து – 43.06
சவுத் ஆப்பிரிக்கா – 38.39
பங்களாதேஷ் – 34.38
பாகிஸ்தான் – 25.93
வெஸ்ட் இண்டீஸ் – 18.52

- Advertisement -