இந்திய அணி 20 வருடங்களுக்கு முன்பாக மும்பையில் 17 ரன்களை வைத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக வென்றது போல நாளை நியூசிலாந்து அணிக்கு எதிராக வெல்ல முடியுமா? என்கின்ற எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான பெங்களூரு முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி நாளை கடைசி நாளில் 107 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும். அந்த அணியின் கையில் மொத்தம் 10 விக்கெட்டுகள் இருக்கிறது. கடைசி நாள் ஆடுகளம் என்பதால் இந்திய பந்துவீச்சாளர்கள் ஏதாவது மேஜிக் செய்வார்களா என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
20 வருடத்திற்கு முன் எழுதப்பட்ட வரலாறு
2024 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா அணி ரிக்கி பாண்டிங் தலைமையில் இந்தியா வந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 104 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 203 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் அனில் கும்ப்ளே, 5 முரளி கார்த்திக் 4 விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 203 ரன்கள் எடுத்தது. இந்த இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணியின் பகுதி நேர சுழல் பந்துவீச்சாளர் மைக்கேல் கிளார்க் மொத்தம் ஆறு விக்கெட் கைப்பற்றி அசத்தினார். மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு 107 ரன்கள் இலக்கு கொடுக்கப்பட்டது.
இந்தியா செய்த மேஜிக்
இதைத்தொடர்ந்து குறைந்த எளிய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் ஹர்பஜன் சிங் மற்றும் முரளி கார்த்திக் இருவரும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக கொடுத்தார்கள். அந்த அணி 93 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹர்பஜன் சிங் 5, முரளி கார்த்திக் 3, அனில் கும்ப்ளே 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதையும் படிங்க : 183 ரன்.. கடைசி ஓவர் திரில்.. பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தியது.. எமர்ஜிங் ஆசிய கோப்பை 2024
நாளை நியூசிலாந்து அணிக்கு எதிராக ரோகித் சர்மா மற்றும் கம்பீர் கூட்டணி நியூசிலாந்து அணிக்கு எதிராக 107 ரன்களை வைத்து வெற்றி பெறுமா? 20 வருடம் கழித்து மீண்டும் அதே வரலாறை இந்திய அணி படைக்குமா? என்கின்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டிருக்கிறது. மேலும் நாளை ஐந்தாவது நாள் ஆடுகளம் என்பதாலும், இந்திய அணியில் உலகத்தரமான மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள் இருப்பதாலும், நியூசிலாந்து பேட்ஸ்மேன்களும் கலக்கத்தில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!






