இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் வருகிற நவம்பர் மாதத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த முறை ஆஸ்திரேலியா அணி கோப்பையை வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடருக்கு தயாராகும் விதம் குறித்து ஆல் ரவுண்டர் மிச்சல் மார்ஸ் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
டெஸ்ட் தொடருக்கு தயாராகும் ஆஸ்திரேலியா
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இந்த கோப்பை இந்திய அணியின் வசம் இருக்கும் நிலையில் தற்போது அதை ஆஸ்திரேலிய அணி மீண்டும் வெற்றி பெரும் முனைப்பில் தயாராகி வருகிறது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான கேமரூன் கிரீன் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறும் சூழ்நிலையில் அவருக்கு பதிலாக மற்றொரு ஆல் ரவுண்டர் மிச்சல் மார்ஸ் ஆஸ்திரேலியா அணியில் இணைய உள்ளார்.
இந்தியா தொடரில் விளையாடுவதற்கு முன்பாக ஆஸ்திரேலியா உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ஷெபீல்ட் ஷீல்ட் தொடரில் விளையாட உள்ள மார்ஸ் அதில் பந்து வீச எவ்வளவு ஆர்வமாக உள்ளது என்று சில முக்கிய கருத்துகளை பகிர்ந்திருக்கிறார். பந்துவீச்சாளர்களை தாண்டி ஒரு ஆல் ரவுண்டர் வீசும் 10 முதல் 13 ஓவர்கள் ஆட்டத்தின் சூழ்நிலையை எப்படி மாற்றும் என்பது குறித்தும் சில முக்கிய கருத்துக்களை மார்ஸ் கூறியிருக்கிறார்.
முக்கியமான ஆல் ரவுண்டர் கதாபாத்திரம்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிக்காக அதிகம் பந்து வீச மாட்டேன். அந்த முதல் டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் விதமாக அதன் ஒரு பகுதி இதுவாகும். எனக்கு பந்து வீசுவது என்பது மிகவும் பிடிக்கும். எனவே இந்த வாரம் ஆஸ்திரேலியாவுக்காக பந்து வீசவும் அங்கிருந்து சில விஷயங்களை கட்டமைக்கவும் காத்திருக்கிறேன். ஒரு அணியில் ஆல் ரவுண்டர் கதாபாத்திரம் என்பது மிகவும் முக்கியமானது.
இதையும் படிங்க: இந்தியா நியூசி.. முதல் நாள் ஆட்டம் ரத்து.. வடிகால் வசதி இருந்தும் திடீர் முடிவு ஏன்? – முழு தகவல்கள்
குறிப்பாக அவர்களுக்கு சிறிது இடைவெளி என்பது மிகவும் தேவை. கடந்த சில சீசன்களை திரும்பிப் பார்த்தால் எங்கள் ஆல் ரவுண்டர் வீரர்கள் ஒரு போட்டியில் 10 முதல் 13 ஓவர்கள் வரை வீசி இருக்கலாம். ஆனால் உண்மையாக பார்த்தால் அதிகம் இல்லை. ஒரு ஆட்டத்தில் அந்த 10 முதல் 13 ஓவர்கள் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை அறிவோம். எனவே என்னால் முடிந்தவரை அந்த தொடருக்கு தேவையான வகையில் அனைத்து முறையில் பந்து வீச தயாராகி வருகிறேன்” என்று கூறி இருக்கிறார்.






