ரோகித் சொன்னது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நடந்தது.. மைக்கேல் வாகன்கிட்ட போய் காட்டுங்க – பசித் அலி பேட்டி

0
211
Basit

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் கம்ரன் குலாம் போன்ற ஒரு பேட்ஸ்மேன் இருப்பதை மைக்கேல் வாகனிடம் கொண்டு காட்டுங்கள் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி விமர்சனம் செய்திருக்கிறார்.

நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் வந்த கம்ரன் குலாம் 224 பந்துகளில் 118 ரன்கள் குவித்து ஆச்சரியப்படுத்தினார். பாகிஸ்தான் அணி 19 ரன்னுக்கு இரண்டு விக்கெட் இழந்த பொழுது உள்ளே வந்து அணியை மீட்டார்.

- Advertisement -

பாபர் அசாம் நீக்கப்பட்டதில் மைக்கேல் வாகன்

இங்கிலாந்து அணிக்கு எதிராக மீதம் இருந்த இரண்டு போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து ஐந்து முக்கிய வீரர்கள் நீக்கப்பட்டார்கள். அதில் பாகிஸ்தான் அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் பாபர் அசாமும் ஒருவர். இது பாகிஸ்தான் கிரிக்கெட்டை தாண்டி உலக அளவில் பலருக்கும் ஆச்சரியப்படுத்தியது. இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினும் பாபர் அசாமை நீக்கி இருக்கக் கூடாது என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பாபர் அசாம் போன்ற ஒரு வீரரை நீக்குவதால் ரசிகர்கள் போட்டியை பின் தொடர மாட்டார்கள் என்றும், இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் ஸ்பான்ஸர்கள் கிடைக்காது எனவும் பேசி இருந்தார். தற்போது இதற்கு பசித் அலி பதிலடி கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

ரோகித் சர்மா கூறியது நடந்தது

இதுகுறித்து பசித் அலி பேசும் பொழுது “கம்ரன் குலாம் சதம் அடித்ததில் சிறப்பான விஷயம் என்னவென்றால் அவர் 19 ரன்னுக்கு இரண்டு விக்கெட்டுகளை பாகிஸ்தான் அணி இழந்த பொழுது உள்ளே வந்து இதை செய்திருக்கிறார். பாபருக்கு ஓய்வு கொடுத்ததால் ஸ்பான்ஸர்கள் வர மாட்டார்கள் என்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள். தற்போது கம்ரன் குலாம் படத்தை மைக்கேல் வாகனிடம் கொண்டு போய் காட்டுங்கள். இவரைப் போன்ற வீரர் எங்களிடம் இருக்கிறார் என்று சொல்லுங்கள்”

இதையும் படிங்க : 3-0 ரோகித் அணி இத செஞ்சே ஆகணும்.. இல்லன்னா பைனல் போக அந்த 3 டீமால இந்தியாவுக்கு பிரச்சனை.. விரிவான விளக்கம்

“தற்பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார். அவர்தான் பாபர் போன்ற வீரர்களுக்கு தற்போது மாற்று இல்லை என்று சொல்லிக் கொண்டு இருந்தார். ஆனால் தேர்வு குழுவில் இருந்த அகிப் ஜாவித் மற்றும் தைரியமான முடிவை எடுத்து புதிய வீரர்களை உள்ளே கொண்டு வந்து சாதித்து இருக்கிறார்கள். இது பாகிஸ்தான் கிரிக்கெட் வளர்ச்சிக்கு துணை நிற்கலாம். இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என ரோகித் சர்மா கூறியது தற்பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நடந்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -