நான் ரஞ்சி சீசன்ல நல்லா ஆடுனா.. பிசிசிஐ எனக்கு இத செஞ்சு தரேன்னு வாக்கு கொடுத்துருக்கு – சஞ்சு சாம்சன் பேட்டி

0
192
Sanju

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனும் இந்திய கிரிக்கெட் வீரருமான சஞ்சு சாம்சன் சமீபத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சதம் அடித்து தனது திறமையை மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் பிசிசிஐ தனக்கு கொடுத்திருக்கும் வாக்குறுதி குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

திறமையை வெளிப்படுத்திய சாம்சன்

இந்தியாவின் கேரளாவை சேர்ந்த புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரான சஞ்சு சாம்சன் இளம் வயதிலேயே ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் ஆக விளையாடி தனது அணியை சிறப்பான முறையில் வழிநடத்தி வருகிறார். டி20 தொடரில் இவரது அதிரடி ஆட்டத்தை பார்த்த இந்திய அணி கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இவருக்கு வாய்ப்பு அளித்தது.

ஆனால் துரதிஷ்டவசமாக இவருக்கு விளையாடும் பிளேயிங் லெவன் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கௌதம் கம்பீர் தலைமையிலான பயிற்சிக் குழு சாம்சனுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை அளித்து வந்த நிலையில் அதனை பயன்படுத்திக் கொள்ள தவறிய சாம்சன் சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடி தனது சதத்தை வெளிப்படுத்தியதன் மூலமாக மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தினார். இந்த சூழ்நிலையில் உள்நாட்டு டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து விளையாடுமாறும் பிசிசிஐ தன்னை சர்வதேச டெஸ்ட் தொடருக்கு பரிசீலித்து வருவதாக சில முக்கிய கருத்துக்களை சாம்சன் கூறி இருக்கிறார்.

- Advertisement -

வாக்குறுதி கொடுத்த பிசிசிஐ

இது குறித்து சாம்சன் விரிவாக கூறும்போது “சிவப்பு பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் திறமை என்னிடம் இருப்பதாக நான் உணர்கிறேன். எனவே வெள்ளை பந்து கிரிக்கெட் தொடரில் மட்டும் விளையாடி என்னை கட்டுப்படுத்த நான் விரும்பவில்லை. இந்திய அணிக்காக டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டும் என்பது எனது ஆசை. துலீப் டிராபி தொடருக்கு முன்பாக தலைமை குழு என்னிடம் சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்காக பரிசீலனை செய்து வருவதாக கூறியது.

இதையும் படிங்க : 142 ரன்.. நம்பர் 1 இங்கிலாந்தை.. ஒரே போட்டியில் வெளியே அனுப்பிய வெஸ்ட் இண்டீஸ்.. வினோத சம்பவம்.. மகளிர் டி20 உலக கோப்பை

மேலும் அந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு ரஞ்சி டிராபி தொடர்களில் தொடர்ந்து விளையாடுமாறு என்னை கேட்டுக் கொண்டது. இந்த முறை நான் தயாரான விதம் சிறப்பாக இருந்தது. இலங்கை தொடருக்கு பின்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அகாடமியில் டிராவிட் சார் மற்றும் ஜூபின் பருச்சாவிடம் பயிற்சி பெற்று எனது ஆட்டத்தில் விளையாடினேன். துலீப் டிராபியில் நான் அடித்த சதம் இந்தியாவின் சிறந்த பவுலர்களுக்கு எதிராக இருந்ததால் அந்த உணர்வு நன்றாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -