இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முக்கியமான முதல் டெஸ்ட் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தற்போது தயாராகி வருகின்றனர்.
இந்த சூழலில் இந்திய அணி கிரிக்கெட் வீரரும் உள்ளூர் வீரருமான கேஎல் ராகுல் நாளை விளையாடுவது குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
நாளை இந்தியா நியூசிலாந்து முதல் டெஸ்ட்
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான நியூஸிலாந்து அணி ஏற்கனவே இந்தியா வந்தடைந்து தங்களது பயிற்சியை துவங்கிய நிலையில் நாளை பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.
சொந்த நாட்டில் நடைபெறும் போட்டி என்பதால் இந்த போட்டியில் கட்டாயமாக வெற்றிபெறும் முனைப்பில் இந்திய அணி தற்போது ஆயத்தமாகி வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான விக்கெட் கீப்பர் கே எல் ராகுல் முதன்முதலாக தான் சின்னசாமி மைதானத்தில் விளையாடி அனுபவங்கள் குறித்து சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார். நாளை நடைபெற உள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ள கே எல் ராகுல் இந்த மைதானத்தில் விளையாடிய அனுபவம் குறித்து கூறியிருக்கிறார்.
மூன்று மணி நேர திரைப்படம் ஓடுவது போன்ற உணர்வு
இது குறித்து அவர் கூறும் போது “உங்களது சொந்த மைதானத்திற்கும், நீங்கள் வளரும் பருவத்தில் கிரிக்கெட் விளையாடிய இடத்திற்கும் திரும்பவது என்பது எப்போதும் சிறப்பு வாய்ந்த ஒன்று. நான் எனது 11 1/2 வயதில் முதன்முதலாக இங்கு விளையாட ஆரம்பித்தேன். எனக்கு தற்போது 32 வயதாக இருக்கும் நிலையில் விஷயங்கள் மாறி உள்ளது. ஆனால் இப்போதும் இங்கு விளையாடுவது முதல் முறையாக விளையாடுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
இதையும் படிங்க:உண்மைய சொல்லிடறேன்.. இந்த பசங்களுக்கு நாங்க இத செய்ய போறோம் – ரோகித் சர்மா வெளியிட்ட தகவல்
நீங்கள் மைதானத்தின் நடுப்பகுதிக்கு செல்லும் போது பல உணர்வுகள் மனதின் உள்ளே பாய்கின்றன. உள்ளே சென்ற இரண்டு நிமிடங்களில் நான் விளையாடிய நேரம், பிறகு வயது பிரிவு, ஐபிஎல், ரஞ்சி மற்றும் சர்வதேச கிரிக்கெட் என மூன்று மணி நேர திரைப்படம் உங்கள் தலையில் ஏற்பட்டது போன்ற உணர்வு உண்டானது. இவற்றை நினைக்கும்போது ஒரு உணர்ச்சிமயமான தருணம் ஏற்படுகின்றது. இது ஒரு மாயாஜாலமான உணர்வு. எனது சொந்த வீடு இது என்று குறிப்பிடும் இடத்தில் மக்கள் வெளிநாட்டினர் மற்றும் இந்தியர்கள் ஆகியோர் விளையாடி மகிழ்கின்றனர்”என்று கூறியிருக்கிறார்.






