ஓபனா சொல்றேன்.. டீம் இந்தியால இவங்க 2 பேர் இருந்தா ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம் – நியூசி ரச்சின் ரவீந்திரா பேட்டி

0
1875

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கிறது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து அணியின் இளம் ஆட்டக்காரரான ரச்சின் ரவீந்திரா இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்த சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா நியூசிலாந்து டெஸ்ட் தொடர்

இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக நியூசிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற இந்திய அணிக்கு இந்த வெற்றிகள் அவசியமான ஒன்றாக உள்ளது. சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய மண்ணில் வலுவான சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் 9 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 15.43 சராசரியுடன் 66 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். மறுபுறம் ஜடேஜா எட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரா ஜடேஜா மற்றும் அஸ்வின் குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இரண்டு தரமான இந்திய வீரர்கள்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் வெளிப்படையாக கூற வேண்டுமானால், இந்திய அணியின் சொந்த சூழ்நிலை, அவர்களது பந்துவீச்சாளர்களின் தரம் மேலும் அவர்களது பேட்ஸ்மேன்களின் தரம் என்ன என்பதை நாங்கள் நன்கு அறிவோம். அவர்களுக்கு இந்த சூழ்நிலை என்பது நன்கு பழக்கப்பட்ட ஒன்று. இங்கு அவர்கள் வளர்ந்தவர்கள் என்பதால் இதனை நன்றாக அறிவார்கள். ஒரு அணி இங்கு வந்து வெற்றி பெறுவது என்பது எவ்வளவு கடினம் என்பது இது காட்டுகிறது.

இதையும் படிங்க:இந்த அவமானம் தேவையா.. பாபர் அசாம் குறித்த கேள்வி.. பென் ஸ்டோக்ஸ் கொடுத்த பதில்.. வாயடைத்து போன பாக் நிருபர்

ஒரு பகுதியில் தொடர்ச்சியாக நீண்ட நேரம் நிலைத்து நின்று வந்து வீசக்கூடிய பந்துவீச்சாளர்கள் அவர்களிடத்தில் இருக்கிறார்கள். அதாவது இந்திய அணிக்கு தொடர்ச்சியாக விளையாடும் இரண்டு பந்துவீச்சாளர்களை பார்க்கிறோம். அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் மிகவும் திறமையான பந்துவீச்சாளர்கள். மேலும் அவர்களால் பேட்டிங்கும் செய்ய முடியும். இது நிலைமையை மேலும் கடினம் ஆக்குகிறது இந்திய அணி மிகச் சிறந்த அணி” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -