நியூசிலாந்து டெஸ்ட்.. அஸ்வின் உடைக்க காத்திருக்கும் 5 மெகா ரெக்கார்டுகள்.. சில தனித்துவ சாதனைகள்

0
404
Ashwin

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை மறுநாள் தொடங்க இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 5 மெகா சாதனைகளை படைப்பதற்கான வாய்ப்பு ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு உருவாகி இருக்கிறது.

நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இந்தியா வந்திருக்கிறது. இந்த டெஸ்டை தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றும் பொழுது ஏறக்குறைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அஸ்வின் படைக்க இருக்கும் புதிய சரித்திரம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட் : ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் ஒட்டுமொத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 43 போட்டிகளில் 187 விக்கெட் எடுத்திருக்கிறார். தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் 37 டெஸ்டில் 185 விக்கெட் எடுத்திருக்கிறார். இதை உடைக்க இன்னும் இரண்டு விக்கெட் மட்டுமே தேவை.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் 200 விக்கெட் : தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் ஒட்டுமொத்தமாக 200 விக்கெட் கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற மெகா சாதனையை படிப்பதற்கு அஸ்வினுக்கு மேற்கொண்டு 15 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது.

- Advertisement -

உடைய இருக்கும் வார்னே சாதனை

சர்வதேச டெஸ்டில் அதிக ஐந்து விக்கெட்: 102 டெஸ்ட் போட்டியில் விளையாடியிருக்கும் அஸ்வின் இதுவரை 37 முறை 5 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். இன்னும் ஒரு முறை 5 விக்கெட் கைப்பற்றினால், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஐந்து விக்கெட் கைப்பற்றிய அவர் பட்டியலில் சேன் வார்னேவை முந்தி இரண்டாவது இடத்தை பிடிப்பார். முதல் இடத்தில் முத்தையா முரளிதரன் இருக்கிறார்.

அதிக டெஸ்ட் விக்கெட்டில் ஏழாவது இடம் : அஸ்வின் தற்பொழுது 102 டெஸ்ட் போட்டிகளில் 527 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். இன்னும் நான்கு விக்கெட்டை பெற்றுவதன் மூலம் ஆஸ்திரேலியாவின் நாதன் லயனை தாண்டி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் பட்டியலில் ஏழாவது இடத்தை பிடிப்பார்.

இதையும் படிங்க: இந்திய டெஸ்ட் தொடர்.. நட்சத்திர ஆஸ்திரேலியா வீரர் விலகல்.. எல்லா திட்டங்களும் வீணானது.. வெளியான தகவல்

இந்தியாவில் அதிக டெஸ்ட் விக்கெட்: அனில் கும்பளே இந்தியாவில் மட்டும் 476 டெஸ்ட் விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். இதுவே இந்தியாவில் ஒருவர் கைப்பற்றிய அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் ஆகும். தற்போது இந்தச் சாதனையை உடைப்பதற்கு அஸ்வினுக்கு மேற்கொண்டு 11 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. அவர் இந்தியாவில் இதுவரையில் 466 டெஸ்ட் விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.

- Advertisement -