இந்திய அணிக்கு வீரர்களின் காயம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும், மாற்று வீரர்கள் இருக்கிறார்கள் எனவும் பங்களாதேஷ் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறியிருக்கிறார்.
நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது.
இந்திய அணியில் காயமும் மாற்று வீரர்களும்
தற்போது இந்திய அணியில் காயம் காரணமாக முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விளையாடவில்லை. இருந்த போதிலும் கூட இந்திய அணி நிர்வாகம் மிகச் சிறப்பான முறையில் முன்னெச்சரிக்கையாக தயாராகி ஆகாஷ் தீப்பை அந்த இடத்திற்கு உருவாக்கி விட்டது.
இப்படி இந்திய அணியை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு வீரர்களுக்கும் மாற்று வீரர்கள் வெளியில் தயாராகவே இருக்கிறார்கள். அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகாதவர்களாக இருந்தால் கூட, முதல் வாய்ப்பிலேயே எந்த மண்ணிலும் சாதிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்கிறார்கள். தற்பொழுது இது குறித்து நியூசிலாந்து தலைமைப் பயிற்சியாளர் இந்திய அணியை பாராட்டி பேசி இருக்கிறார்.
அதிக டெஸ்ட் வீரர்கள் இருக்கும் அணி
இதுகுறித்து நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் ஸ்டெட் கூறும் பொழுது “இந்திய அணிகள் வீரர்களுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால் அது மற்ற அணிகளை பாதிப்பது போல அவர்களை பாதிப்படைய செய்யாது. ஏனென்றால் காயம் அடைந்த வீரரின் திறமைக்கு சமமாக வேறு ஒரு வீரர் வருவார். அவர்களுக்குஅப்படி நிறைய வீரர்கள் வெளியே இருக்கிறார்கள்”
“டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நிறைய வீரர்களைக் கொண்ட திறமையான அணியாக இந்தியா இருந்து வருகிறது. இப்படிப்பட்ட திறமை கொண்ட ஒரு அணி தான் தற்பொழுது எங்களுக்கு எதிராக விளையாட இருக்கிறது. நாங்கள் இந்த சவாலை மிகவும் புரிந்து கொண்டிருக்கிறோம்”
இதையும் படிங்க : நாங்க எடுத்தது 297 இல்ல 170 ரன்தான்.. சூரியகுமார் எங்க கிட்ட சொன்ன விஷயமே வேற – ரவி பிஸ்னாய் பேட்டி
“டிம் சவுதி உடன் நான் பேசியதில் அவர் பழைய செயல் திறனில் இல்லை என்பதை புரிந்து கொண்டார். ஆனால் அவர் மீண்டும் திரும்பி வர முயற்சி செய்கிறார் அதற்கு கடுமையாக உழைக்கிறார். இதற்கு இந்தியாவில் அவர் முன்பு பந்து வீசிய சில வீடியோக்களை எடுத்து நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சில மாற்றங்களுடன் அவர் மீண்டும் திரும்பி வருவார்” என்று கூறியிருக்கிறார்.






