ரோகித் சர்மா பத்தின அந்த விஷயம் உண்மைதான்.. இது நடந்தா இந்திய அணிக்கு பெரிய அடி – ஆகாஷ் சோப்ரா பேட்டி

0
170

இந்திய கிரிக்கெட் அணி வருகிற நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாட இருக்கிறது. இந்த முறை இந்திய அணியை எப்படியாவது வீழ்த்தி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நிலைமையில் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் இருக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ரோஹித் சர்மா குறித்து கேள்விப்பட்ட தகவல் உண்மைதான் என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் அதிகம்

இந்திய கிரிக்கெட் அணி கடந்த சில வருடங்களாகவே ஆஸ்திரேலியா மண்ணில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து செலுத்தி வருகிறது. முதலில் விராட் கோலி தலைமையில் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை வென்ற இந்திய அணி அதற்குப் பிறகு 2021ஆம் ஆண்டு ரகானே தலைமையில் மீண்டும் ஆஸ்திரேலியா மண்ணில் கோப்பையை பற்றி வரலாறு படைத்தது. அப்போது இந்திய அணியில் முன்னணி வீரர்கள் காயம் அடைந்து வெளியேறிய நிலையிலும் இந்தியா தனது செயல் திறனை வெளி காட்டியது.

அதற்குப் பிறகு இந்திய மண்ணில் ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை வெற்றி பெற்று உள்நாடு, வெளிநாடு என எதிலும் பாரபட்சமின்றி ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி வந்தது. எனவே இந்த முறை இந்திய அணிக்கு எதிரான தொடரை கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்று ஆஸ்திரேலியா அணி வீரர்கள் அதற்குத் தகுந்தவாறு தயாராகி வரும் சூழ்நிலையில் ரோகித் சர்மா முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஏதேனும் ஒன்றுக்கு கிடைக்க மாட்டார் என்ற தகவல் உண்மை என்று ஆகாஷ் சோப்ரா திடுக்கிடும் தகவல் ஒன்றை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ரோஹித் சர்மா குறித்த தகவல் உண்மைதான்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இது நிச்சயமாக நமது உணர்ச்சிகளை அசைக்க செய்யும் வகையில் இருக்கும். ரோகித் சர்மா குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. இது அதிகாரப்பூர்வமான ஆதாரங்களில் இருந்து வெளிவரவில்லை என்றாலும் வெளி வந்திருக்கும் தகவல் என்பது உண்மைதான். அவர் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஏதேனும் ஒரு ஆட்டத்தை இழக்கக்கூடும். அது முதல் டெஸ்ட் போட்டி அல்லது இரண்டாவது டெஸ்ட் போட்டியாக இருக்கலாம்.

இதையும் படிங்க:ரொம்ப வருத்தமா இருக்கு.. ஐசிசி எங்கள வச்சு இந்த பிளான்தான் பண்ணிட்டு இருக்கு – பாக் சோயப் அக்தர் பேட்டி

ஆனால் அதற்குப் பிறகு கண்டிப்பாக விளையாடுவார் என்பது உண்மை. இதே போல கடந்த முறை ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் காயமடைந்தாலும் சிட்னி டெஸ்ட் போட்டியில் விளையாட களமிறங்கினார். அவர் அடிலெய்டு மற்றும் மெல்போர்ன் டெஸ்டில் விளையாடவில்லை. விராட் கோலி பிங்க் பால் டெஸ்டில் விளையாடி விட்டு அதற்குப் பிறகு மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட வில்லை. இங்கேயும் ரோஹித் சர்மா முதல் இரண்டில் ஏதேனும் ஒன்றுக்கு கிடைக்காமல் போகலாம் இது இந்திய அணிக்கு பெரிய இழப்பு” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -