டி20 கிரிக்கெட் தொடர் போன்று மிகக் குறுகிய வடிவில் நடைபெற உள்ள ஹாங்காங் சிக்ஸ் கிரிக்கெட் தொடர் விரைவாக நடைபெற உள்ளது. இதில் இந்திய அணியோடு சேர்த்து மொத்தம் 12 நாடுகள் இந்த போட்டி தொடரில் பங்கு பெற உள்ளன.
இந்த சூழ்நிலையில் இந்த போட்டி தொடரில் கலந்து கொள்ள உள்ள இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மீண்டும் நடைபெற உள்ள ஹாங்காங் சிக்ஸ் தொடர்
1992ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஹாங்காங் சிக்சஸ் கிரிக்கெட் போட்டி தொடர் ரசிகர்களை சுவாரசியப்படுத்த மிகக்குறுகிய வடிவ ஓவர்கள் கொண்ட போட்டி தொடராக அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் சச்சின் டெண்டுல்கர் முதல் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா வரை இந்தத் தொடரில் விளையாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி கடைசியாக 2012ம் ஆண்டு இந்த தொடரில் பங்கு பெற்றது.
அதற்குப் பிறகு சில சூழ்நிலைகளின் காரணமாக பல வருடங்கள் இந்த போட்டி தொடர் நடைபெறாத நிலையில் தற்போது மீண்டும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு தற்போது ரசிகர்கள் இடையே சுவாரசியத்தை கூட்டி இருக்கிறது. இந்தத் தொடருக்காக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ஓய்வு பெற்ற முன்னாள் ஆட்டக்காரர் ராபின் உத்தப்பா கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். உத்தப்பா கேப்டனாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்னும் ஆறு வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணி அறிவிப்பு
பாரத் சிப்லி, கேதார் ஜாதவ், மனோஜ் திவாரி, ஷாபாஸ் நதீம், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் ஆவர். மொத்தமாக ஏழு வீரர்கள் கொண்ட ஒரு அணியில் விக்கெட் கீப்பரை தவிர மற்ற அனைவருக்கும் தலா ஒரு ஓவர் வீசுவதற்கு வழங்கப்படும். மேலும் பேட்டிங் பொறுத்தவரை ஒரு பேட்ஸ்மேன் 31 ரன்கள் அடித்த பிறகு மற்ற பேட்ஸ்மேன் விளையாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டித் தொடர் நவம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதையும் படிங்க:உண்மைய சொல்றேன்.. டி20 பைனல்ல ஜெயிக்க.. நான்தான் பொய்யா நடிச்சு அத பண்ண சொன்னேன் – ரிஷப் பண்ட் பேட்டி
இந்த தொடர் நடைபெற உள்ள மூன்று நாட்களும் 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான டிக்கெட் விலை மூன்று நாட்களுக்கும் வெவ்வேறு விதமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது முதல் நாளில் டிக்கெட் விலை 150 டாலர்களாகவும் இரண்டாவது நாளில் 250 டாலர்களாகவும் மூன்றாவது நாளில் 350 டாலர்களாகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் மூன்று நாள் பாசை ஒட்டுமொத்தமாக 580 டாலர்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.






