தென் ஆப்பிரிக்க அணியை வென்ற ஆப்கான்.. இந்தியா உலகின் ஒரே அணியாக சாதனை.. 12 மாதத்தில் 4 மெகா வெற்றி

0
4617
Afghanistan

நேற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கான் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி உலகில் ஒரே அணியாக அரிய சாதனை ஒன்றை தற்பொழுது படைத்திருக்கிறது.

தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றன. ஆப்கானிஸ்தான் அணி இந்த தொடரை இந்தியாவில் வைத்து விளையாடாமல் தற்போது சார்ஜாவில் வைத்து விளையாடிக் கொண்டு வருகிறது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணியை சரித்த ஆப்கான்

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பந்து வீசிய ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்கா 36 ரன்கள் எடுத்திருந்த போது ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி அதிர்ச்சி அளித்தது. தென் ஆப்பிரிக்கா அணி 50 ரன்கள் ஆவது எடுக்குமா என்கின்ற சந்தேக நிலையில், வியான் முல்டர் அரைசதம் அடிக்க ஒரு வழியாக 16 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இதைத்தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான அணி நான்கு விக்கெட்டை மட்டும் இழந்து 26 ஓவரில் இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆப்கானிஸ்தான் அணியின் முதல் வெற்றி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய அணியின் அரிய சாதனை

முழு உறுப்பினர் கிரிக்கெட் நாடுகளாக மொத்தம் 12 நாடுகள் இருக்கிறது. இதில் ஆப்கானிஸ்தான் அணி இந்தியா தவிர மற்ற எல்லா நாடுகளையும் ஏதாவது ஒரு கிரிக்கெட் வடிவத்தில் வென்று விட்டது. ஆனால் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி அடையாத ஒரே முழு உறுப்பினர் கிரிக்கெட் நாடாக தற்பொழுது இந்தியா மட்டுமே இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இந்த வெற்றியால் இந்தியாவுக்கு இப்படி ஒரு அரிய சாதனை கிடைத்திருக்கிறது.

இதையும் படிங்க : ODI கிரிக்கெட்டிலும் பாஸ்பால்தான் ஆடுவோம்.. ஆஸிக்கு அந்த செக் இருக்கு – இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி புரூக் பேட்டி

மேலும் ஆப்கானிஸ்தான் அணி கடந்த 12 மாதங்களில் இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என நான்கு பெரிய கிரிக்கெட் நாடுகளை தோற்கடித்து இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணி கடந்த ஆண்டிலிருந்து பெரிய எழுச்சியை சந்தித்து வருகிறது. ஆசிய கண்டத்தில் இந்திய அணிக்கு அடுத்ததாக வெள்ளைப்பந்து வடிவத்தில் ஆப்கானிஸ்தான் அணிதான் சிறந்ததாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -