183 ரன்.. கூலிங் கிளாஸ் ஸ்ரேயாஸ் சாம்சன் மெகா சொதப்பல்.. 2வது நாளிலேயே உறுதியான தோல்வி.. படிக்கல் போராட்டம்

0
471
Shreyas

நடப்பு துலீப் டிராபி இரண்டாவது சுற்றில், இந்திய டி அணிக்கு எதிரான போட்டியில், இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில், இரண்டாவது இன்னிங்ஸில், இந்திய ஏ அணி 222 ரன்கள் முன்னிலை பெற்று மிகவும் வலிமையான நிலையில் இருக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய டி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் தங்கள் அணி பந்து வீசும் என்று அறிவித்தார். மயங்க் அகர்வால் தலைமையிலான இந்திய ஏ அணி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது.

- Advertisement -

காப்பாற்றிய சாம்ஸ் முலானி

இந்திய ஏ அணியின் பேட்டிங் வரிசையில் ரியான் பராக் 37 ரன்கள் எடுத்தார். அதே சமயத்தில் மயங்க் அகர்வால் மற்றும் திலக் வர்மா இருவரும் ஏமாற்றம் அளித்தார்கள். 94 ரன்களுக்கு அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கியது.

இந்த நிலையில் சுழல் பந்துவீச்சாளர் சாம்ஸ் முலானி சிறப்பாக விளையாடி 89 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக வந்த தனுஷ் கோட்டியன் அவருடைய பங்குக்கு அதிரடியாக 53 ரன்கள் எடுத்தார். இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பந்துவீச்சில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

ஸ்ரேயாஸ் அய்யர் சஞ்சு சாம்சன் ஏமாற்றம்

இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூலிங் கிளாஸ் அணிந்து பேட்டிங் செய்ய வந்து ஏழு பந்துகள் சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறி வெறுப்பேற்றினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் டி20 போல தவறான ஷாட் விளையாடி 6 பந்தில் 5 ரன் எடுத்து ஏமாற்றம் தந்தார்.

ஒரு பக்கம் தனி ஒரு வீரராக போராடிய தேவ்தத் படிக்கல் 124 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார். கடைசிக் கட்டத்தில் வேகப் பந்துவீச்சாளர் 29 பந்தில் 31 ரன்கள் அடித்தார். முடிவில் இந்திய டி அணி 183 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பந்துவீச்சில் கலீல் அகமது மற்றும் அகீப் கான் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

T இதையும் படிங்க : 525 ரன்.. காயத்திலிருந்து திரும்பி வந்து கேப்டன் ருதுராஜ் அசத்தல்.. தமிழக ஜெகதீசன் சிறப்பான ஆரம்பம் – துலீப் டிராபி 2024

இதைத்தொடர்ந்து 107 ரன்கள் முன்னிலை உடன் விளையாடிய இந்திய ஏ அணிக்கு கேப்டன் மயங்க் அகர்வால் 87 பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு துவக்க ஆட்டக்காரர் பிரதம் சிங் 82 பந்தில் 59 ரன் எடுத்து களத்தில் நிற்கிறார். இன்று இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் இந்திய ஏ அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து 222 ரன் முன்னிலை பெற்று இருக்கிறது. எனவே இந்த போட்டியில் இரண்டாவது நாளிலேயே இந்திய டி அணியின் தோல்வி ஏறக்குறைய உறுதியாகி இருப்பதாக தெரிகிறது.

- Advertisement -