பங்களாதேஷ் டெஸ்ட்.. இந்திய பிளேயிங் XI இப்படித்தான் இருக்கும்.. காரணம் ஆஸி தொடர்தான் – தினேஷ் கார்த்திக் கணிப்பு

0
225
DK

இந்திய ஒன்றரை மாத ஓய்வுக்குப் பிறகு உள்நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த நிலையில் அந்தத் தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையிலேயே இந்திய பிளேயிங் லெவன் அமையும் என தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.

இந்திய அணி உள்நாட்டில் பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக மொத்தம் ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும், அடுத்து இந்த ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் ஆஸ்திரேலியா சென்று ஐந்து டெஸ்ட் போட்டிகள் என மொத்தம் பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

4 வேகம் 4 சுழல்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடருக்கு தற்போது முதல் போட்டிக்கு 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பில் பவுலிங் யூனிட்டில் சில கவனிக்கத்தக்க அம்சங்கள் இடம் பெற்று இருக்கிறது.

இந்த தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் என நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இதேபோல வேகப்பந்துவீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகேஷ் குமார் மற்றும் யாஸ் தயால் என நான்கு பேர் இருக்கிறார்கள். எனவே போட்டிக்கு பவுலிங் யூனிட் எப்படி அமையும் என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியா தொடருக்கு சிந்திப்பார்கள்

இந்த நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அடுத்து ஆஸ்திரேலியா சென்று விளையாடும் டெஸ்ட் தொடருக்கான வேலைகள் நடக்கும் என இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார். எனவே பவுலிங் யூனிட்டில் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் மட்டுமே இடம் பெறுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க : பியூஸ் சாவ்லா தேர்வு செய்த.. ஆல் டைம் ODI இந்திய அணி.. கோலிக்கு அந்த இடம் கிடையாது.. மாஸ் செலக்சன்

இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “முதலில் இந்தியா சற்று வேகமாக இருக்கும் ஆடுகளங்களில் விளையாடும் என்று நினைக்கிறேன். மேலும் பங்களாதேஷ் அணியை வீழ்த்த இது நல்ல வழியாக இருக்கும். மேலும் இந்திய அணியும் ஆஸ்திரேலியா தொடருக்கு தயாராகிவிடும். இதன் காரணமாக இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களை வைத்துக்கொண்டு மூன்று வேகப் பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாடும்” என்று கூறி இருக்கிறார்

- Advertisement -