பாகிஸ்தான் கிரிக்கெட் என்ன நடக்குது.. நான் பிஎஸ்எல் ஆடும் போது மேஜிக் மாதிரி இருந்துச்சு – கெவின் பீட்டர்சன் பேட்டி

0
128

சமீபத்தில் நடைபெற்ற முடிந்த பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து முன்னாள் இங்கிலாந்து அணி வீரரான கெவின் பீட்டர்சன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு என்ன ஆனது? என்பது குறித்து தனது கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -

கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 448 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதற்குப் பிறகு களம் இறங்கிய வங்கதேச அணி பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து முதல் இன்னிங்சில் 565 ரன்கள் குவித்தது. இது பாகிஸ்தான் அணிக்கு நிச்சயம் எதிர்பாராத நிகழ்வாக அமைந்திருக்கும்.

அதற்குப் பிறகு 117 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிய பாகிஸ்தான் அணி, 146 ரன்கள் மட்டுமே குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. குறிப்பாக வங்கதேச அணியின் பந்துவீச்சு முதல் வின்னிங்சை விட இரண்டாவது இன்னிங்சில் அபாரமாக இருந்தது. அதற்குப் பிறகு களம் இறங்கிய வங்கதேச அணி ஏழு ஓவர்களில் 30 ரன்கள் விக்கெட் இழப்பின்றி எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் தனது சொந்த மண்ணிலேயே பாகிஸ்தான் அணி வளர்ந்து வரும் வங்கதேச அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி தற்போது பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தான் பாகிஸ்தானில் நடைபெறும் பிஎஸ்எல் தொடரில் விளையாடிய போது அந்த லீக்கின் தரம் அபாரமாக இருக்கும் என்றும் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்தும் தனது கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

இதுகுறித்து பீட்டர்சன் விரிவாக கூறும்போது “நான் பாகிஸ்தானில் பிஎஸ்எல் விளையாடிய போது அந்த லீக்கின் தரம் மிகவும் அபாரமாக இருக்கும். அதில் விளையாடிய வீரர்கள் அனைவரும் தொழிலில் பக்தி மற்றும் சிறந்த பணி ஒழுக்க முறைகளை கொண்டிருந்தனர். அதில் இளம் வீரர்கள் விளையாடுவதை பார்க்கும் போது மேஜிக் போன்று இருந்தது. ஆனால் தற்போது அங்கு நடக்கும் சூழ்நிலைகளை பார்த்தால் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை? என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:கேப்டனா தோனி எல்லா பிரச்சனைகளையும் முடித்து வைக்கிற ஆளு.. ஆனா கோலி வேற மாதிரி – சஞ்சய் பாங்கர் பேட்டி

எனவே இந்த இரண்டு அணிகளுக்கு இடையே வருகிற இரண்டாவது டெஸ்ட் போட்டி 30ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதில் கட்டாயம் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டிய நிலைமையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -