வெறும் 9 விக்கெட்.. பும்ரா அஸ்வின் சாதனை பட்டியலில் .. முதல் பாக் வீரராக இணைய ஷாகின் அப்ரிடிக்கு பெரிய வாய்ப்பு

0
129

வங்கதேச கிரிக்கெட் அணி தற்போது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற இந்த தொடரில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் பாகிஸ்தான் உள்ளது.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சாகின் ஷா அப்ரிடி இன்னும் ஒன்பது விக்கெட்டுகள் எடுத்தால் அஸ்வின் மற்றும் பும்ரா ஆகியோருடன் சேர்ந்து எலைட் கிளப்பில் இணைய உள்ளார்.

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு மொத்தமாக இன்னும் 7 போட்டிகள் இருக்கின்றன. இதில் முதலில் இரண்டு போட்டிகள் வங்கதேச அணிக்கு எதிராக விளையாடும் நிலையில், அடுத்த மூன்று போட்டிகளும் இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடுகிறது. அதற்கு அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்காவில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாட உள்ளது. மொத்தமாக ஐந்து டெஸ்ட் போட்டிகள் பாகிஸ்தானில் விளையாடும் சூழ்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற பாகிஸ்தான் அணிக்கு ஒரு நல்ல வாய்ப்பு உருவாகி உள்ளது.

முதலில் வங்கதேச அணி பாகிஸ்தான் வந்து விளையாட சில பிரச்சனைகள் எழுந்த நிலையில் தற்போது அதனை சரி செய்து வங்கதேசம் தற்போது பாகிஸ்தானில் நாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. எனவே இரண்டு அணிகளுக்கும் இந்த தொடர் முக்கியமாக பார்க்கப்படும் நிலையில் பாகிஸ்தான் வேக பந்துவீச்சாளர் அப்ரிடி ஒரு சிறப்பான சாதனையை படைக்க இருக்கிறார்.

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மொத்தமாக 24 போட்டிகளில் விளையாடி 91 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள நிலையில் 100 விக்கெட்டுகள் வீழ்த்த அவருக்கு இன்னும் ஒன்பது விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. அப்ரிடி ஒன்பது விக்கெட்டுகள் இந்த தொடரில் வீழ்த்தினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை படைக்க இருக்கிறார்.

இந்த சாதனை பட்டியலில் ஏற்கனவே ஆஸ்திரேலியா அணியின் சுழற் பந்துவீச்சாளர் நாதன் லயன் 197 விக்கெட்டுகளோடு முதல் இடத்திலும் 175 விக்கெட்களுடன் ஆஸ்திரேலியா அணியின் பேட் கம்மின்ஸ் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இவர்களுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 174 விக்கெட்டுகளும்,பும்ரா 110 விக்கெட்டுகளும் ரவீந்திர ஜடேஜா 102 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்த பட்டியலில் உள்ளனர்.

இதையும் படிங்க:தோனிக்காக பிசிசிஐ கிட்ட நாங்க இத கேட்கல.. அவங்கதான் அத சொன்னாங்க.. உண்மை இதான் – சிஎஸ்கே காசி விஸ்வநாதன் பேட்டி

எனவே இந்த டெஸ்ட் தொடரில் அப்ரிடி இந்த சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 21ஆம் தேதி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. படைத்தால்

- Advertisement -