இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், அதற்குப் பிறகு இந்திய அணி நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரையும் சிறப்பாக கைப்பற்றியது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான பென் டக்கட் இந்த இந்திய இளம் வீரர் உலகத்தரம் வாய்ந்தவர் என்று சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இந்தியாவுக்கு ஆச்சரியம் அளித்தாலும், அதற்குப் பிறகு இந்திய அணி வெகுண்டு எழுந்து மீதம் இருந்த நான் டெஸ்ட் போட்டிகளையும் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
குறிப்பாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இந்தத் தொடரில் தனது மிகச் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். குறிப்பாக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முறை 200 ரன்களுக்கு மேல் குவித்து தனது உலகத்தரமான பேட்டிங்கை நிரூபித்தார். ஐந்து டெஸ்ட் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 712 ரன்கள் குவித்து தனது சிறந்த பேட்டிங்கை நிரூபித்தார். இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கட் ஜெயஸ்வாலை உலகத்தரம் வாய்ந்த வீரர் என்று கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் விவாக கூறும் போது “உண்மையாக நான் அவருக்கு ஒரு நல்ல பாராட்டை கொடுத்தேன். ஜெய்ஸ்வால் நிச்சயமாக ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது நான் இதைச் சொல்லி இருக்கிறேனா இல்லை. ஆனால் அதைப் பற்றி யாரும் பெரிதாக பேசவில்லை. அவர் சிறப்பாக விளையாடினார் முழு தொடரிலும் நம்ப முடியாத அளவுக்கு மிகச் சிறப்பாக விளங்கினார்” என்று கூறி இருக்கிறார்.
இவரது இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டெஸ்ட் தொடரில் நிரந்தர துவக்க ஆட்டக்காரராக இடம் பிடித்து விளையாடும் ஜெய்ஸ்வால் டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் நிலையாக சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருவதால் அவ்வப்போது இவரது வாய்ப்புகள் வருவதும் போவதுமாக இருக்கிறது.
இதையும் படிங்க:290 ரன்.. மீண்டும் காப்பாற்றிய இந்திய ஆஸி பார்ட்னர்ஷிப்.. ரகானே அணி செமி பைனலுக்கு தகுதி
எனவே இனிவரும் தொடர்களிலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் மூன்று தொடர்களிலும் இவரே நிரந்தர துவக்க ஆட்டக்காரராக இடம் பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக முன்னாள் வீரர்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.






