தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் ஆஸ்திரேலியா அணிக்கு சுழல் பந்துவீச்சு ஆலோசகராகவும் பங்களாதேஷ் அணிக்கு பயிற்சி பயிற்சியாளராகவும் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி மற்றும் டெல்லி அணிக்கு பயிற்சியாளர் குழுவிலும் இருந்திருக்கிறார். இந்த நிலையில் இவர் விராட் கோலியை ஐபிஎல் தொடரில் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்க தான் யோசனை முதலில் கூறியதாகத் தெரிவித்திருக்கிறார்.
தற்போது மிக வெற்றிகரமாக நடக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஐபிஎல் தொடருக்கு முன்பாக கபில்தேவ் ஐஎஸ்எல் என்கின்ற தொடரை ஆரம்பித்தார். அதில் இணைந்து விளையாடிய காரணத்தினால் ஸ்ரீதரன் ஸ்ரீராம் பிசிசிஐ தடைக்கு உள்ளாக வேண்டியது.
இதைத் தொடர்ந்து இங்கிலாந்து சென்று கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி, அங்கிருந்து நியூசிலாந்து சென்று பயிற்சியாளருக்கான தகுதித் தேர்வுகளை முடித்து தற்போது முழு பயிற்சியாளராக செயல்பட்டு கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் ஒரு யூ டியூப் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் விராட் கோலி குறித்து பல வெளிப்படையான விஷயங்களை பேசி இருக்கிறார். மேலும் தானே அவரை முதலில் ஆர்சிபி அணிக்காக துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கினால் சரியாக இருக்கும் என்று கூறியதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து ஸ்ரீதரன் ஸ்ரீராம் பேசும்பொழுது ” நான் ஆர்சிபி அணியில் பயிற்சியாளர் குழுவில் இருந்த பொழுது, ஒருநாள் நள்ளிரவில் விராட் கோலிக்கு ” நீங்கள் துவக்க ஆட்டக்காரராகத் தாராளமாக விளையாடலாம்” என்று மெசேஜ் செய்தேன். அடுத்த சில நிமிடங்களில் துவக்க ஆட்டக்காரராய் அவர் இதுவரையில் கிரிக்கெட்டில் விளையாடிய மொத்த புள்ளி விவரங்களையும் எனக்கு அனுப்பினார். அவ்வளவு குறைந்த நேரத்தில் எனக்கு அந்த விஷயங்கள் வந்தது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.
இதையும் படிங்க : 28 ஓவர்.. 173 ரன்.. தென் ஆப்பிரிக்கா தைரியமான முடிவு.. வெஸ்ட் இண்டீஸ் அணியை காப்பாற்றிய அதனாஸ்.. டிராவான முதலாவது டெஸ்ட்
அவர் ஏற்கனவே துவக்க வீரராய் தான் களமிறங்க வேண்டும் என்கின்ற ஆர்வத்தில் இருந்ததால் இதை எல்லாம் எடுத்து வைத்திருக்கிறார். அதேபோல் விராட் கோலி இடம் ஒரு விஷயத்தை நீங்கள் சொல்லும் பொழுது அதற்கான சரியான காரணங்களும் ஆதாரங்களும் இருந்தால் அதை உடனடியாக ஏற்றுக் கொள்வார். அவர் இந்த மாதிரி விஷயத்தில் எந்த ஈகோவும் காட்ட மாட்டார்” என்று கூறியிருக்கிறார்.






