2023 உலக கோப்பை கிடையாது.. அந்த சீரியஸ் தோத்ததுதான் பெரிய ஏமாற்றம் – ராகுல் டிராவிட் பேச்சு

0
230
Dravid

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்த ரவி சாஸ்திரியின் பதவி காலம் முடிந்ததும் ராகுல் டிராவிட் புதிய பயிற்சியாளராக 2021 ஆம் ஆண்டு வந்தார். மேலும் இந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை பயிற்சியாளராக வென்று பொறுப்பில் இருந்து விலகியும் இருக்கிறார். இந்த நிலையில் இந்திய அணிக்கு தன்னுடைய பயிற்சியாளர் காலத்தில் எது ஏமாற்றமாக அமைந்தது? என்பது குறித்து கூறியிருக்கிறார்.

ராகுல் டிராவிட் முதன்முதலாக 2021 ஆம் ஆண்டு இறுதியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாடுவதற்கு சென்ற பொழுது புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். அவருக்கு முதல் தொடரே கடினமான தென் ஆப்பிரிக்க சூழ்நிலையில் அமைந்தது.

- Advertisement -

இந்த நிலையில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் டெஸ்ட் வென்று அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டியையும் தோற்று இழந்தது. இதைத்தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாட புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித் சர்மா காயத்தால் வராததால், கே.எல்.ராகுல் தலைமையில் விளையாடி முழுவதுமாக தோற்றது.

இந்த நிலையில் அந்த டெஸ்ட் தொடரின் தோல்விக்கு பிறகு விராட் கோலி ஒட்டுமொத்த கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். மேலும் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக பொறுப்பேற்ற முதல் டெஸ்ட் தொடரே மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இந்திய அணிக்கான தன்னுடைய பயிற்சியாளர் காலத்தில் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் தோல்வி மிகவும் ஏமாற்றமான ஒன்று என ராகுல் டிராவிட் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ராகுல் டிராவிட் பேசும்போது “என்னுடைய இந்திய அணிக்கான பயிற்சியாளர் காலத்தில் எது குறைவான பாயிண்டாக இருக்கும் என்று கேட்டால் 2021 ஆம் ஆண்டு நான் முதன்முதலாக இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவிற்கு சென்ற டெஸ்ட் தொடர்தான் இருக்கும். நாங்கள் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றோம்.

இதற்கு அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடவில்லை. நாங்கள் ஏற்கனவே ரோகித் சர்மாவையும் இழந்திருந்தோம். இப்படி சில மூத்த வீரர்கள் கிடைக்காமல் போனார்கள். இந்த நிலையில் நாங்கள் தொடரை கைப்பற்றுவதற்கான அருமையான வாய்ப்பிலிருந்து தொடரை வெல்ல முடியாமல் தோற்றோம்.

இதையும் படிங்க : கும்ப்ளேவிட அந்த பாக் வீரர்தான் பெஸ்ட்.. என்னோட ஆல்டைம் டாப் 3 ஸ்பின்னர்ஸ் இவங்கதான்.. இங்கிலாந்து டேவிட் லாயிட் பேட்டி

இருந்த போதிலும் கூட நாங்கள் குறிப்பிட்ட அந்தத் தொடரில் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டோம். நான் தோல்வியில் இருந்தாலும் நாம் அணியை எந்த அளவிற்கு தாங்கிப் பிடிக்கிறோம் நாம் எந்த அளவுக்கு கற்றுக் கொண்டு மேலே வருகிறோம் என்பதுதான் முக்கியமானது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -