இன்று இந்தியா இலங்கை அணிகள் மோதிக்கொண்ட மூன்றாவது ஒருநாள் போட்டியில் 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 2-0 என இலங்கை அணி கைப்பற்றியது. இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பதிவு செய்திருக்கிறார்.
இந்தத் தொடரின் மூன்றாவது போட்டியிலும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா டாஸ் தோற்றார். முதலில் பேட்டிங் செய்த இலங்கை துவக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாடோ 102 பந்துகளில் 96 ரன்கள், குசால் மெண்டிஸ் 82 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார்கள். இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்களில் 248 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 26.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரோகித் சர்மா 35 ரன்கள் வாஷிங்டன் சுந்தர் 30 ரன்கள் எடுத்தார்கள். வெல்லாலகே ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இந்த போட்டியில் இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சை எப்படி எதிர்கொண்டு விளையாடுவது என்று தெரியாத மாதிரி இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன்கள் விளையாடி ஆட்டம் இழந்த விதம் இந்திய ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தி இருக்கிறது. விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டம் இழந்த விதம் மிக மோசமானதாக அமைந்திருந்தது.
இந்த நிலையில் தோல்விக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ” இது குறித்து நான் கவலைப்படவில்லை. ஆனால் எங்களுடைய விளையாட்டு திட்டம் மற்றும் தனிப்பட்ட வீரர்களின் செயல்பாடு குறித்து நாங்கள் பார்க்க வேண்டும். நீங்கள் இந்தியாவுக்கு விளையாடும் பொழுது ஒரு முறை கூட மனநிறைவு ஏற்படாது. நான் கேப்டனாக இருக்கும்போது மனநிறைவு ஏற்பட வாய்ப்பு இல்லை. அதே சமயத்தில் நல்ல கிரிக்கெட் விளையாடிய இலங்கை அணிக்கு கிரெடிட் கொடுக்க வேண்டும்.
இதையும் படிங்க : 101 ரன் 10 விக்கெட்.. 27 வருடங்கள் கட்டிக்காத்த பெருமை முடிந்தது.. இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அணி தொடரை வென்றது
இலங்கை அணி எங்களை விட சிறப்பாக கிரிக்கெட் விளையாடியது. நாங்கள் கண்டிஷனை பார்த்து அதற்குரிய முறையில் காம்பினேஷனை அமைத்தோம். இந்த தோல்வியை தாண்டி நாம் பார்க்கவேண்டிய இடங்கள் மற்றும் பாசிட்டிவான விஷயங்கள் என சிலது இருக்க செய்கிறது. இப்படியான விஷயங்கள் கிரிக்கெட்டில் நடக்கும். இந்தத் தொடர் உலகின் முடிவு கிடையாது. நீங்கள் இப்படி எங்காவது தொடரை இழக்கத்தான் செய்வீர்கள். ஆனால் நீங்கள் தோல்விக்குப் பிறகு எப்படி திரும்பி வருகிறீர்கள் என்பது தான் முக்கியமானது” என்று கூறியிருக்கிறார்.






