கம்பீர் நீங்க வெளிநாட்டு கோச் இல்ல.. கோலி ரோகித்துக்கு இப்படி பண்ணி இருக்க கூடாது – ஆஷிஷ் நெக்ரா விமர்சனம்

0
443
Nehra

தற்போது இந்திய அணி மூன்று போர்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி எதிராக அந்த நாட்டில் ரோகித் சர்மா தலைமையில் விளையாடி வருகிறது. மேலும் இந்த அணியில் மூத்த வீரர்கள் விராட் கோலி மற்றும் கேஎல்.ராகுல் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.தற்பொழுது இந்த தொடருக்கான யுக்தியில் கவுதம் கம்பீர் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் விஷயத்தில் தவறு செய்து விட்டார் என ஆஷிஷ் நெக்ரா விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூரியகுமார் தலைமையில் விளையாடியது. இந்தத் தொடரை முழுவதுமாக இந்திய அணி கைப்பற்றியது. இந்த வகையில்இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணம் சிறப்பாக ஆரம்பித்தது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து ஹர்திக் பாண்டியா ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடாமல் ஓய்வு கேட்டு இந்தியா திரும்பினார். அதே சமயத்தில் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாட வேண்டும் என வற்புறுத்தி அழைத்து வந்தார்.

இந்த நிலையில் இந்த தொடரின் முதல் போட்டி யாரும் எதிர்பார்க்காத வகையில் டை ஆனது. இரண்டாவது போட்டி எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இந்திய அணிக்கு தோல்வியில் முடிந்தது. குறிப்பாக இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணியின் மிடில் ஆர்டர் மிகவும் சுமாரான முறையில் விளையாடி இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆஷிஷ் நெக்ரா கூறும்பொழுது ” இந்தியா இரண்டு மூன்று மாதங்களுக்கு அடுத்து விளையாடும் அரிதான ஒருநாள் தொடராக இது அமைந்தது. இந்த நிலையில் இந்த தொடரை சாம்பியன்ஸ் டிராபிக்கு குறைவான காலம் இருப்பதால் இளம் வீரர்களை சோதிப்பதற்காக பயன்படுத்தி இருக்க வேண்டும்.

கம்பீர் குறித்து நான் அறிவேன். அவர் புதிய பயிற்சியாளராக இந்திய அணிக்கு வந்திருக்கிறார். எனவே அவருக்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி உடன் நேரம் செலவிட்டு புரிந்து கொள்வதற்கு விரும்பி இருக்கிறார். எனவே அவர்கள் இருவரையும் இந்த தொடருக்கு அழைத்திருக்கிறார். ஆனால் கம்பீருக்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருமே நன்றாகத் தெரிந்தவர்கள்தான்.

இதையும் படிங்க : டீம் செலக்சன் பேட்டிங் பொசிஷன் கம்பீர் தப்பு செய்தாரா.. 2021ல் ஆஸி செய்த அதே மாஸ்டர் பிளானா?.. முழு அலசல்

மேலும் கம்பீர் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி உடன் நல்ல சமநிலையை பெறவேண்டிய அவசியம் இருக்கும் வெளிநாட்டு பயிற்சியாளர் கிடையாது. எனவே புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை உருவாக்குவதற்கு இது நல்ல வாய்ப்பாகும்.மேலும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்தியாவில் தொடர் ஆரம்பிக்கும் பொழுது விளையாடி இருக்கலாம். நான் இதை ஒரு தவறான அணுகுமுறை என்று சொல்லவில்லை, ஆனால் இந்தத் தொடருக்கான யுக்தியாக இதை செய்திருக்கலாம்” என்று சொல்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -