கம்பீர் வாஷிங்டன் சுந்தருக்கு பண்ண அதுதான்.. இந்திய அணி ஜெயிக்காத காரணம்.. பாகிஸ்தான் பசித் அலி விமர்சனம்

0
512

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் தொடக்கத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடினாலும், இறுதிக் கட்டத்தில் இலங்கை அணியின் பந்துவீச்சால் போட்டி இரண்டு அணிக்குமே வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிந்தது.

வெற்றி பெற்றிருக்க வேண்டிய இந்த போட்டியில் இந்திய அணி டிராவில் முடிக்க காரணம் கௌதம் கம்பீர் எடுத்த தவறான முடிவுதான் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் நிஷான்கா 56 ரன்களும், வெலால்கே 67 ரன்களும் குவித்தனர். இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா மிகச்சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். ஆனால் அதற்குப் பிறகு 80 ரன்களுக்குள் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்தது.

விராட் கோலி ஸ்ட்ரைக்கில் இருந்தபோது, மறுமுனையில் வாஷிங்டன் சுந்தர் நான்காவது இடத்தில் களமிறங்கியது ஆச்சரியம் அளிக்கும் வகையில் அமைந்தது. வழக்கமாக பேட்டிங் ஆர்டரின் இறுதியில் வரும் வாஷிங்டன் சுந்தர் இந்த முறை நான்காவது இடத்தில் களமிறங்கினாலும் நான்கு பந்துகளை எதிர்கொண்டு ஐந்து ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். ஒருவேளை இவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் களம் இறங்கி விளையாடி இருந்தால் இறுதிக்கட்டத்தில் சுந்தர் களமிறங்க ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும்.

- Advertisement -

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி கூறும் போது “கௌதம் கம்பீர் வாஷிங்டன் சுந்தரை நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய வைத்தது எனக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் அமைந்தது. கௌதம் கம்பீர் இடது வலது காம்பினேஷனை உருவாக்க அந்த முயற்சியை மேற்கொண்டாரா? என்று தெரியவில்லை. நான்காவது இடத்திற்கு வாஷிங்டன் சுந்தரை அனுப்பியதில் எந்த அர்த்தமும் இல்லை என்று நினைக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

கம்பீர் எடுத்த இந்த முடிவுதான் இந்திய அணி ஜெயிக்காததற்கு முக்கிய காரணமாக அமைந்ததாக மறைமுகமாக சாடி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பல மாதங்கள் பிறகு களமிறங்கிய கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பேட்டிங்கில் ஓரளவு செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இனி வரும் போட்டிகளில் இறுதி வரை நின்று ஆட்டத்தினை முடிக்க வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க:2வது போட்டி.. இந்திய அணி ரிவென்ச் எடுக்க மழை விடுமா?.. இலங்கைக்கு லக்.. வானிலை அறிக்கை முழு விபரம்

அது மட்டுமில்லாமல் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா எப்போதும் போலவே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மூன்றாம் வரிசையில் களம் இறங்கிய விராட் கோலி இந்த முறை 23 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறி இருக்கிறார். எனவே இனி அடுத்து வரும் இரண்டு போட்டியிலும் விராட் கோலி கணிசமான பங்களிப்பை வழங்க வேண்டியது அவசியம்.

- Advertisement -