என்னோட கடைசி ஓவரை விட பெஸ்ட் அதுதான்.. நான் பசங்க கிட்ட இதைத்தான் சொன்னேன் – சூரியகுமார் யாதவ் பேச்சு

0
1438
Surya

இந்திய அணி இன்று மூன்றாவது டி20 போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக சூப்பர் ஓவரில் அபாரமான முறையில் வென்றது. இதை எடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 எனக் கைப்பற்றியது. இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் பேட்டி அளித்திருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு துணை கேப்டன் கில் 37 பந்தில் 39 ரன்கள், ரியான் பராக் 18 பந்தில் 26 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 18 பந்தில் 25 ரன்கள் எடுத்தார்கள். இலங்கை தரப்பில் தீக்சனா மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 15 ஓவர்களில் 108 ரன்கள் எடுத்திருந்தது. மேற்கொண்டு 30 பந்துகளில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் அங்கிருந்து ஏழு விக்கெட்டுகளை இழந்து 29 ரன்கள் மட்டுமே எடுக்க ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.

சூப்பர் ஓவரில் வாஷிங்டன் சுந்தர் இரண்டு ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து சூரியகுமார் யாதவ் தீக்சனா வீசிய சூப்பர் ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இந்திய அணியின் தரப்பில் ரவி பிஸ்னாய், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங் மற்றும் சூரியகுமார் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுதாக வென்றது.

- Advertisement -

இந்த வெற்றிக்கு பிறகு பேசிய இந்திய கேப்டன் சூர்யா குமார் யாதவ் “நான் வீசிய கடைசி ஓவரை விட, 48 ரன்களுக்கு ஐந்து விக்கெட் என இருந்த பொழுது இளம் வீரர்கள் காட்டிய கேரக்டர்தான் மிகச் சிறப்பானது. இந்த விக்கெட்டில் 140 ரன்கள் சரியானதாக இருக்கும் என்று நான் நினைத்தேன்.நான் இது போன்ற ஆட்டங்களை பார்த்திருக்கிறேன் என்று வீரர்களிடம் கூறினேன். மேலும் இதயத்தை வைத்து நாம் விளையாடினால் இந்த போட்டியை வெல்ல முடியும் என்றும் சொன்னேன்.

இதையும் படிங்க : 24 ரன் 9 விக்கெட்.. சுந்தர் ரிங்கு அசத்தல்.. சூர்யா மேஜிக் கேப்டன்சி.. சூப்பர் ஓவரில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி வெற்றி

அணி வீரர்கள் காட்டும் பாசிட்டிவ் மற்றும் ஒவ்வொருவர் மீதும் செலுத்தும் அக்கறை என்னுடைய வேலையை மிக மிக எளிதாக்குகிறது. நான் பேட்டிங் செய்யும் பொழுது எனக்கு கொஞ்சம் அழுத்தம் இருக்கவே செய்கிறது. ஆனால் என்னை வெளிப்படுத்தி விளையாட விரும்புகிறேன். இந்தத் தொடருக்கு முன்பாக சொன்னது போலவே நான் கேப்டனாக இருக்க விரும்பவில்லை தலைவராக விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -