நவீன டி20 கிரிக்கெட்டின் மிகச்சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ரஷீத் கான் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 100 பந்துகள் தொடரில் விளையாடி வருகிறார்.
அதில் ட்ரெண்ட் ராக்கெட் அணிக்காக விளையாடு வரும் ரஷீத் கான் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் மிகச் சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.
ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளரான ரஷித் கான் உலகம் எங்கிலும் நடைபெற்ற வரும் பிரான்சிஸ் டி20 தொடர்களில் பங்கு பெற்று விளையாடி வருகிறார். உலகமெங்கும் டி20 லீக்குகளில் விளையாடி வரும் இவர் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இவரது பந்து வீச்சுக்கு என்று இந்தியாவில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த அளவுக்கு தனது பந்து வீச்சில் தனித் திறமையும் துல்லியமும் வாய்ந்த நபராக இருக்கிறார். சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனான ரஷித் கான் தனது அணியும் மிகச் சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் தனது கேப்டன்சி மூலம் ஆப்கானிஸ்தான் அணியை சூப்பர் 8 சுற்று வரைக்கும் தகுதி பெற வைத்தார்.
ஒரு கேப்டனாகவும் அணியை சிறப்பாக வழிநடத்தி வரும் ரஷீத் கான் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நூறு பந்துகள் கொண்ட போட்டி தொடரில் விளையாடி வருகிறார். இதில் மான்செஸ்டர் அணிக்கு எதிராக விளையாடி இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் டி20 வரலாற்றில் 600 விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.
ரஷித் கான் இந்த சாதனையை 438 இன்னிங்ஸ்கலில் விளையாடி 600 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இதன் முதலிடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான டுவைன் ப்ராவோ 543 இன்னிங்ஸ்கள் விளையாடி 630 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் வீரரான இம்ரான் தாஹிர் 388 இன்னிங்ஸ்கள் விளையாடி 502 விக்கெட்டுகள் வீழ்த்தி மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க:பிசிசிஐ செய்வதை பாகிஸ்தான் செய்வதில்லை.. கேரி கிரிஸ்டன் தேவையில்லை – ஷாகித் அப்ரிடி பேச்சு
பிராவோ வெஸ்ட் இண்டீஸ் அணியையும் இம்ரான் தாஹிர் தென்னாப்பிரிக்கா அணியையும் சேர்ந்த வீரர்கள் ஆவார்கள். இதற்கு அடுத்த இடத்தில் வங்கதேச அணியைச் சேர்ந்த ஷகீப் அல்ஹசன் 436 இன்னிஸ்கள் விளையாடி 492 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். 25 வயதாகும் ரஷீத் கான் இன்னும் நிறைய வருடங்கள் டி20 கிரிக்கெட்டில் விளையாடும் நிலையில் பிராவோவின் சாதனையை முறியடிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது






