இந்திய அணிக்கு எதிரா.. இலங்கை பிளேயர்ஸ் ஸ்கூல் குழந்தைங்களா மாறிட்டாங்க – பாக் கம்ரன் அக்மல் பேச்சு

0
127
Akmal

தற்போது இலங்கை சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளை வென்று தொடரைக் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் கம்ரன் அக்மல் இலங்கை வீரர்கள் விளையாடும் விதம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்திய அணி டி20 உலக கோப்பை தொடரை வென்ற பிறகு முழு அணியாகத் தற்போது இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. புதிய கேப்டன் மற்றும் புதிய பயிற்சியாளர் உடன் இந்திய அணி இந்தத் தொடரை சந்திப்பதால் இந்திய அணிக்கு முக்கியமானதாக இருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் இந்த தொடருக்கு இலங்கை அணியும் புதிய கேப்டன் மற்றும் புதிய பயிற்சியாளர் உடன் வந்தது. நல்ல பந்துவீச்சு யூனிட் இருப்பதாலும் உள்நாட்டில் விளையாடுவதாலும் இலங்கை அணி இந்திய அணிக்கு கடும் சவால் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் முதல் போட்டியில் 14 ஓவர்களில் 140 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் மட்டுமே இழந்திருந்த இலங்கை அணி மேற்கொண்டு 30 ரன்கள் மட்டுமே சேர்த்து 9 விக்கெட்டுகளை இழந்தது. இதற்கு அடுத்து இரண்டாவது போட்டியில் 15 ஓவர்களுக்கு இரண்டு விக்கெட் மட்டும் இழந்து 130 ரன்கள் எடுத்திருந்த இலங்கை அணி மேற்கொண்டு 31 ரன்கள் மட்டுமே எடுத்து ஏழு விக்கெட்டுகளை இழந்தது.

- Advertisement -

இப்படி இலங்கை அணி சிறப்பாக ஆரம்பித்து இறுதியில் போட்டியை எப்படி முடிப்பது என தெரியாமல் இந்திய அணியிடம் சிக்கி வீழ்ந்தது. குறிப்பாக இலங்கை அணியின் மிடில் ஆர்டர் மற்றும் லோயர் மிடில் ஆர்டர் மிக மோசமான பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தியது. குறிப்பாக லோயர் மிடில் ஆர்டரில் வரும் வனிந்து ஹசரங்கா மற்றும் முன்னாள் கேப்டன் டசன் சனகா இருவரும் மிக மோசமாக பேட்டிங் செய்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க : டி20 உலக கோப்பை உடன் திரும்பிய விமானம்.. டிராவிட் தூங்கிட்டார்.. ரோகித் திட்டினார் – ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட தகவல்

இதுகுறித்து கம்ரன் அக்மல் கூறும் பொழுது “இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி கடைசி 31 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. 190 ரன்கள் எடுக்கக்கூடிய இடத்தில் இருந்து அவர்களால் 161 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அவர்கள் தங்களைத் தாங்களே குற்றம் சாட்டி இருக்கிறார்கள். ஆனால் யாரும் பொறுப்பு எடுத்துக் கொள்ளவில்லை. ஹசரங்கா மற்றும் சனகா இருவரும் ஆட்டம் இழந்தது, ஸ்கூல் குழந்தைகள் விளையாட்டு போல இருந்தது. அவர்களிடம் விளையாட்டு விழிப்புணர்வு மற்றும் பொறுப்பு என்பதே இல்லை” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -