136 ரன்.. அஸ்வின் டீமின் பொன்னான வாய்ப்பை பறித்த நெல்லை.. கடைசி லீக் மேட்ச் திண்டுக்கல் தோல்வி.. டிஎன்பிஎல் 2024

0
324

நடப்பு டிஎன்பிஎல் தொடரின் 28வது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் தோல்வி அடைந்ததன் மூலம் ஒரு பொன்னான வாய்ப்பை தவறவிட்டது.

திண்டுக்கல்லில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங் களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 136 ரன்கள் மட்டுமே குவித்தது. இதில் அதிகபட்சமாக சிவம் சிங் 59 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 70 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 13 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 15 ரன்கள் குவித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவருமே குறைந்த ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். நெல்லை அணித்தரப்பில் சோனு யாதவ் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பின்னர் வெற்றி இலக்கை நோக்கி நெல்லை ராயல் கிங்ஸ் அணி களம் இறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் சூரிய பிரகாஷ் ஜியோ ரன்னில் வெளியேறினாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அருண் கார்த்திக் சிறப்பாக விளையாடி 30 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 45 ரன்கள் குவித்தார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய அஜித்தேஷ் குருசுவாமி 45 ரன்கள் குவிக்க, பின்னர் இறுதிக்கட்டத்தில் சோனு யாதவ் 15 ரன்களும், ஹரிஷ் 15 பந்துகளில் அதிரடியாக விளையாடி இரண்டு பௌண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 22 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இதனால் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 17.5 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. நெல்லை அணித்தரப்பில் சிறப்பாக விளையாடி 43 ரன்கள் குவித்த அஜித் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.

நெல்லை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்திருந்த நிலையில், தொடரை விட்டு வெளியேறியது. ஆனால் அஸ்வின் தலைமையில் ஆன திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஏற்கனவே 6 போட்டிகளில் நான்கு போட்டிகள் வெற்றி பெற்ற நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் திருப்பூர் தமிழன்ஸ் அணியை கீழே தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும்.

இதையும் படிங்க:மழை ஈரத்துல ஜெயிக்கிறது பெரிய மேட்டர் இல்லை.. ஆனா இதுல எனக்கு பெரிய ஏமாற்றம் – சரித் அசலங்கா பேட்டி

இந்த தோல்வியின் மூலம் பொன்னான வாய்ப்பை திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நழுவ விட்டது. வருகிற செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள முதல் குவாலிபயர் போட்டியில் கோவை அணியும், திருப்பூர் தமிழன் அணியும் மோதுகின்றன. புதன்கிழமை எலிமினேட்டர் போட்டியில் திண்டுக்கல் அணியும், சென்னை அணியும் மோத உள்ளன.

- Advertisement -