இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா தற்போதைய டி20 பார்மேட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் கௌதம் கம்பீர் குழு டி20 அணியின் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவை நியமித்ததைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்திய அணி சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்றதோடு சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தங்களது ஓய்வை அறிவித்தனர். அதுமட்டுமல்லாமல் ராகுல் டிராவிட் தலைமையிலான பயிற்சியாளர் குழுவும் விலகிய நிலையில் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் இந்திய அணிக்கு கொண்டுவரப்பட்டார்.
இந்த சூழ்நிலையில் கௌதம் கம்பீர் குழு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக கவனம் கொள்ளாததை தொடர்ந்து புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார். இந்த புதிய கேப்டன் உடன் களமிறங்கும் இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இன்று விளையாட உள்ளது. இந்திய அணியில் ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் போன்ற ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் இருக்கும் நிலையில் சூரியகுமார் யாதவிற்க்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கௌதம் கம்பீர் இந்திய அணியில் ஒரு இயல்பான தலைவரை பார்க்கவில்லை என்றும், சூரியகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டது ஒரு தற்காலிகம்தான் சில வருடங்களில் கில் இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ஸ்காட் ஸ்டைரிஷ் விரிவாக கூறும்பொழுது “இந்த நிகழ்வு என்னை பொருத்தவரையில் சீனியர் வீரர்கள் அனைவரும் தற்போது ஓய்வு பெற்று விட்டனர். ஹர்திக் பாண்டியா கேப்டனாக இல்லாத சமயத்தில், கௌதம் கம்பீர் இந்திய அணியில் ஒரு இயல்பான தலைவரை பார்க்க வில்லை. இதனால் அவரது கவனம் தற்போது சூரியகுமார் யாதவிடம் திரும்பி இருக்கிறது. சூரியகுமார் யாதவ் இதில் ஒரு பாலமாகவோ அல்லது தற்காலிக கேப்டனாகவோ ஒரு சில வருடங்கள் இருப்பார்.
இதையும் படிங்க:15,921 ரன்.. 6 வருஷம்.. சச்சினின் குறிப்பிட்ட சாதனையை இப்படி ஜோ ரூட் முறியடிப்பார் -தினேஷ் கார்த்திக் நம்பிக்கை
சில வருடங்களுக்குப் பிறகு கில்தான் நிரந்தர கேப்டனாக இந்திய அணியில் மாற வாய்ப்புகள் அதிகம்” என்று கூறியிருக்கிறார். சூரியகுமார் யாதவ் ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கௌதம் கம்பீர் தலைமையின் கீழ் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சூரியகுமார் அடுத்த டி20 உலக கோப்பை வரை கேப்டனாக செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது






