மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் குவாலிபயரில் சான் பிரான்சிஸ்கோ யூனிகான் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் மோதிய போட்டியில், வாஷிங்டன் அணி மேக்ஸ் வெல்லின் ருத்ரதாண்டவத்தால் சான் பிரான்சிஸ்கோ அணி குவித்த 145 ரன்கள் இலக்கை வாஷிங்டன் அணி 16 ஓவர்களிலேயே வெற்றி பெற்றது.
மேஜர் லீக் 2014 சீசன் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் நிலையில், அதன் லீக் போட்டிகள் நிறைவடைந்து குவாலிஃபையர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதலில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் டெக்ஸாஸ் அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, குவாலிஃபயர் போட்டியில் சான் பிரான்சிஸ்கோ யூனிகான் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த 7 சான் பிரான்சிஸ்கோ அணி 19 ஓவர்களில் 145 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறி கொடுத்தது. சான் பிரான்சிஸ்கோ அணியில் அதிகபட்சமாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹசன் கான் 36 பந்துகளில் ஆறு சிக்ஸர்களுடன் 57 ரன்கள் குவித்தார். பந்துவீச்சில் மேர்கோ ஜான்சன் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
அதன் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கி விளையாடிய வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஹெட் 44 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 77 ரன்கள் குவித்து சிறப்பான அடித்தளம் அமைத்தார். அவரைத் தவிர மற்ற மூன்று பேட்ஸ்மேன்கள் விரைவிலயே வெளியேறினாலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் சிறப்பாக விளையாடினார்.
23 பந்துகளை மட்டும் சந்தித்த மேக்ஸ்வெல் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்சர்களுடன் 234 ஸ்ட்ரைக் ரைட்டில் 54 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வாஷிங்டன் ப்ரீடம் அணியை வெற்றி பெற வைத்தார். இதனால் வாஷிங்டன் அணி 15.3 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் குறித்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பெற்றது.
இதையும் படிங்க:புது கோச் கம்பீர் முட்டாள் கிடையாது.. ஆனா அவருக்கு இந்தவொரு விஷயம் மட்டும் சவாலா இருக்கும் – ரவி சாஸ்திரி பேட்டி
இதனால் முதல்முறையாக வாஷிங்டன் ஃப்ரீடம் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. தோல்வி அடைந்த சான்பிரான்சிஸ்கோ அணி அடுத்து நடைபெற இருக்கிற சேலஞ்சர் போட்டியில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இதற்கு முன்னர் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் டெக்ஸாஸ் அணி நியூயார்க் அணியை வெற்றி பெற்றது.இதில் வெற்றி பெறுகிற அணி இறுதிப்போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியை எதிர்த்து வருகிற திங்கட்கிழமை விளையாட உள்ளது.






