இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்ல பந்து வீச்சு துறையில் மிக முக்கிய பங்காற்றியவர் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. இந்த நிலையில் ஓய்வில் இருக்கும் அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தன்னுடைய இரண்டாம் வகுப்பிற்கு பிறகு தன் குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றம் குறித்து சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
பும்ரா 2013ம் ஆண்டு முதன்முதலாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அறிமுகமான போதே தனது வித்தியாசமான பந்துவீச்சால் அனைவரையும் ஈர்த்தார். சமீபத்தில் காயத்தால் அவதிப்பட்டாலும் அதற்குப் பிறகு மீண்டு வந்து பந்து வீச்சில் பல்வேறு வேரியேஷன்களையும் கற்றுக்கொண்டு, இந்தியாவின் மிக முக்கியமான பந்துவீச்சாளராக உருமாறி இருக்கிறார்.
அதற்குப் பிறகு டி20 உலகக்கோப்பையில் இவர் செய்த அனைத்துமே வரலாறுதான். தற்போது போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வு எடுத்து வரும் பும்ராவை பிசிசிஐ இனி கவனமாக பயன்படுத்தும் நோக்கில் உள்ளது. பும்ரா இனி முக்கியமான தொடர்களில் மட்டுமே பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் டைம்ஸ் ஆப் பத்திரிக்கை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பும்ரா, தான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது, தனது சகோதரி நான்காம் வகுப்பு படித்ததாகவும் அந்த சூழ்நிலையில் எதிர்பாராமல் அவரது தந்தை மறைவிற்குப் பிறகு அவரது குடும்பத்தில் பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும் நிறைய மாற்றங்களை சந்தித்ததாக கூறியிருக்கிறார்.
இது குறித்து பும்ரா விரிவாக கூறும் பொழுது “நான் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது என் சகோதரி நான்காம் வகுப்பு படிக்கும் போது திடீரென எதிர்பாராதவிதமாக என் தந்தை இறந்து விட்டார். அப்போதுதான் எங்கள் வாழ்வில் பெரிய திருப்பம் ஏற்பட்டது. பின்னர் அந்த சூழ்நிலையில் ஒரு குடும்பமாக நாங்கள் மிகவும் நெருங்கி விட்டோம். பொருளாதார ரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்தோம். அப்போது என் தாய் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டார். அதற்குப் பின்னர் ஒரு குடும்பமாக நாங்கள் நிறைய ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தோம்.
இதையும் படிங்க:இந்தியா பாகிஸ்தானுக்கு போகக்கூடாது.. ஏன்னா அங்க தினம் நடக்கிறது இதுதான் – ஹர்பஜன் கோரிக்கை
ஆனால் அந்த சூழ்நிலையும் எங்கள் பிணைப்பு மிகவும் வலுவாக மாறியது. பல ஆண்டுகள் கழித்தும் இப்போது வரையும் எங்கள் குடும்பம் மிக நெருக்கமாக உள்ளது. வெளிப்படையாகவே எனது சகோதரி இப்போது மேக்கப் துறையில் இருக்கிறார். எனது ஷூட்டிங் நாட்களில் கூட அவர்தான் எனக்கு மேக்கப் ஆர்டிஸ்ட். நாங்கள் நிறைய நன்மை மற்றும் தீமைகளை பார்த்திருக்கிறோம். நாங்கள் வாழ்வில் நிறைய ஏற்றத்தாழ்வுகளை சந்தித்ததால் எங்களை மாற்றிக் கொள்ளாமல் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.






