ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட போதிலும் இந்திய அணியில் நுழைவதில் சூரியகுமார் யாதவுக்கு காலதாமதம் ஏற்பட்டது. ஆனால் இன்று அவர் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக உயர்ந்து இருக்கிறார். இந்த நிலையில் அவரது சிறுவயது பயிற்சியாளர் வேலையில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக முக்கியமான விஷயத்தை வெளியில் கூறியிருக்கிறார்.
சூரியகுமார் யாதவன் சிறுவயது பயிற்சியாளராக அசோக் அஸ்வால்கர் இருந்து வந்தார். இவர் மும்பை செம்பூரில் இருக்கும் பாபா அணுசக்தி மையத்தில் உள்ள மைதானத்தில் க்யூரியட்டர் மற்றும் பயிற்சியாளர் பொறுப்புகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் அவரை திடீரென அந்த பொறுப்பில் இருந்து சம்பந்தப்பட்டவர்கள் நீக்கி இருக்கிறார்கள். இதனால் அவர் இந்த ஊரில் உள்ள உள் விளையாட்டு கிரிக்கெட் அரங்கில் பயிற்சியாளராக சேர்ந்து மாதம் வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு வேலை செய்து கொண்டு வந்திருக்கிறார். இந்த நிலையில் குடும்பத்தினர் பீதி அடையக் கூடாது என்பதற்காக தான் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டதையும் அவர்களிடம் சொல்லாமல் இருந்திருக்கிறார்.
இப்படியான நிலையில் அவர் சூரியகுமார் யாதவிடம் தொடர்பு கொண்டு பேசிய பொழுது, சூரியகுமார் அதற்கு உடனே மதிப்பளித்து சீக்கிரத்தில் ஒரு கிரிக்கெட் அகாடமி தொடங்கி அதில் தன்னுடைய சிறு வயது பயிற்சியாளரை முக்கிய பொறுப்புக்கு கொண்டு வர முடிவு செய்து இருக்கிறார். அவருடைய இந்த துரிதமான நடவடிக்கை தற்பொழுது சமூக வலைதளத்தில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பேசி இருக்கும் சூரியகுமார் யாதவின் சிறுவயது பயிற்சியாளர் கூறும் பொழுது ” நான் 1989 ஆம் ஆண்டு முதல் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் அமைந்துள்ள மைதானத்தில் க்யூரியேட்டர் மற்றும் பயிற்சியாளர் பதவியில் இருந்து வந்தேன். இந்த இரண்டு பொறுப்புகளுக்கும் சேர்த்து ஆரம்பத்தில் நான் 3 ஆயிரம் ரூபாய்க்கு வேலை செய்ய ஆரம்பித்தேன். பிறகு படிப்படியாக எனக்கு மாதம் 45 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைத்தது.
இதையும் படிங்க: இங்கிலாந்து அணியில் பிரச்சனை.. என்னை பற்றி வந்த அந்த செய்தி உண்மை கிடையாது – இயான் மோர்கன் மறுப்பு
இந்த நிலையில் அவர்கள் என்னை 2023 ஆம் ஆண்டு வேலையில் இருந்து நீக்கி விட்டார்கள். இதை நான் என்னுடைய குடும்பத்தினர் பீதி அடைவார்கள் என வீட்டில் கூறவில்லை. பிறகு நான் இந்த ஊரில் உள்ள ஒரு உள் விளையாட்டு அரங்கில் பயிற்சியாளராக சேர்ந்தேன். பிறகு அங்கு எனக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் கிடைத்தது. இந்த நிலையில் இது குறித்து சூரியகுமார் யாதவிடம் பேசியதும் அவர் உடனே இதற்கு மதிப்பு கொடுத்தார். பிறகு கிரிக்கெட் அகாடமி தொடங்கி இளைஞர்களுக்கு நம்மால் முடிந்ததை செய்யலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.






