மலிங்கா, பும்ரா இல்லை.. இவர்தான் வரலாற்றில் சிறந்த யார்க்கர் பந்தை வீசியவர் – ஸ்டெய்ன் வெளிப்படையான பாராட்டு

0
924

தென்னாப்பிரிக்காவின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின். சமீபத்தில் வரலாற்றில் சிறந்த யார்க்கரை வீசிய பந்து வீச்சாளர் யார் என்ற கேள்விக்கு ஸ்டெயின் சுவாரசியமான பதிலை அளித்திருக்கிறார்.

கிரிக்கெட்டின் சுவாரசியமான பகுதிகளில் ஒன்றாக திகழ்வது வேகப்பந்து வீச்சு. பவுண்டரி லைனில் இருந்து ஓடி வந்து கிரீஸ் லைனை தாண்டாமல் பேட்ஸ்மேன் கண்ணிமைக்கும் நேரத்தில், வீசப்படும் பந்து ரசிகர்களிடையே கவனம் இருக்கும் வகையில் ஒன்றாக அமைந்திருக்கும். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை பல வேகப்பந்து வீச்சாளர்கள் தங்கள் முத்திரையை பதித்திருக்கின்றனர்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவின் ப்ரெட்லீ, மெக்ராத், பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், சோயப் அக்தர், இலங்கையின் சமிந்தா வாஸ், லசித் மலிங்கா இந்தியாவின் ஜாகீர் கான், தென்னாப்பிரிக்காவின் ஸ்டெயின் ஆகியோர் கவனிக்கத்தக்க வேக பந்துவீச்சாளர்களாக இருந்திருக்கின்றனர். அதிலும் தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டெயினின் பந்துவீச்சுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

அவரது கட்டுக்கோப்பான பந்து வீசும் ஸ்டைல் மற்றும் ஆடுகளத்தில் அடிக்கும் அவரது லைன் அண்ட் லென்த் ஆகியவை அவ்வளவு துல்லியமாக இருக்கும். 2004ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமான ஸ்டெயின் அந்தப் போட்டியில் மூன்று விக்கெட்டுகள் மொத்தமாக கைப்பற்றினார். மொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 93 போட்டிகளில் விளையாடி 439 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 26 முறை 5 விக்கெட்டுகளையும், ஐந்து முறை 10 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் ஐஸ்லாந்து கிரிக்கெட்டின் சமூக வலைதள பக்கத்தில் வரலாற்றில் சிறந்த யார்க்கரை வைத்த பந்துவீச்சாளர் யார்? என்று ஸ்டெயினிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த டேல் ஸ்டெயின் 1999ஆம் உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடிய போது ஸ்டீபன் பிளமிங்குக்கு எதிராக யார்க்கரை வீசிய சோயப் அக்தர் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதற்குப் பின்னர் பும்ரா, ஸ்டார்க் என தரமான பந்துவீச்சாளர்கள் வந்தாலும் ஸ்டெயின் 99ஆம் ஆண்டு நடைபெற்றதை நினைவு கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:4,4,4,4,4.. லேடி தோனி ரிச்சா கோஷ்.. ஆசிய கோப்பை வரலாற்றில் முதல் சாதனை.. அடிபொலி பேட்டிங்

ஸ்டெயின் கூறியதைப் போலவே பிளம்மிங் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது கண்ணிமைக்கும் நேரத்தில் துல்லியமான வேகத்தில் வீசி அந்த பந்து பின்னால் இருந்த ஸ்டெம்புகளைத் தகர்த்தது. அதுவே வரலாற்றில் சிறந்த யார்க்கர் பந்து வீச்சாக ஸ்டெயின் கருதுகிறார். அக்தர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக 14 ஆண்டுகள் விளையாடி 178 டெஸ்ட் விக்கெட்டுகளையும், 247 ஒரு நாள் விக்கெட்டுகளையும் டி20 கிரிக்கெட்டில் 19 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்.

- Advertisement -