256 ஸ்ட்ரைக் ரேட்.. முன்னாள் ஆர்சிபி வீரர் உதவி.. சிஎஸ்கேவின் டிஎஸ்கே தகுதி.. சான் பிரான்சிஸ்கோ அணி வெற்றி

0
119

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் 18வது போட்டியில் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சியாட்டில் ஆர்காஸ் அணிகள் மோதிய போட்டியில் சான் பிரான்சிஸ்கோ அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சியாட்டில் அணியை வீழ்த்தி இருக்கிறது. இதன் மூலமாக சிஎஸ்கேவின் மற்றொரு அணியான டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி குவாலிஃபயர் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

டல்லாசில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களம் இறங்கி விளையாடிய சியாட்டில் அணி 20 மூவர்களின் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரன் ஜோன்ஸ் மற்றும் ரிக்‌கல்டன் ஆகியோர் முதல் பந்தியிலேயே ஆட்டம் இழந்து வெளியேறிய நிலையில், அதற்குப் பின்னர் களம் இறங்கிய டிகாக் மற்றும் ஜெயசூர்யா ஜோடி மூன்றாவது விக்கட்டுக்கு 64 பந்துகளில் 97 ரன்கள் குவித்தனர்.

- Advertisement -

சிறப்பாக விளையாடிய டீ காக் 33 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ஜெயசூர்யா 31 ரன்கள் குவிக்க, ரஞ்சன் 26 ரன்களோடு கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருக்க, சியாட்டில் இறுதியாக 152 ரன்கள் குவித்தது.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி சான் பிரான்சிஸ்கோ யூனிகான் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான பின் ஆலன் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் எட்டு பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்களுடன் 256 ஸ்ட்ரைக் ரேட்டில் 77 ரன்கள் குவிக்க, மேத்யூ ஷாட் 19 ரன்கள், ஜோஷ் இங்கிலீஷ் 17 பந்துகளில் 24 ரன்கள் என அதிரடியாக விளையாடினர். பின் ஆலன் ஐபிஎல்லில் முன்னாள் ஆர்சிபி வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதனால் 14.2 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் குவித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சான் பிரான்சிஸ்கோ அணி வெற்றி பெற்றுள்ளது. அதிரடியாக விளையாடிய பின் ஆலன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் சான் பிரான்சிஸ்கோ அணிக்கு இது நான்காவது வெற்றியாக அமைந்திருக்கிறது.

இதையும் படிங்க:கோலிய பத்தி பேசி ட்ரெண்ட் ஆகலாம்னு.. பலர் வேணும்னே இப்படி பண்றாங்க.. இவருக்காக நான் வருத்தப்படுறேன்-சமி பேட்டி

ஏற்கனவே வாஷிங்டன் பிரீடம் மற்றும் சான் பிரான்சிஸ்கோ அணிகள் குவாலிபயர் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும் நிலையில், தற்போது மூன்றாவது அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்றொரு அணியான டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள டெக்ஸாஸ் அணி இரண்டு வெற்றி, இரண்டு தோல்வி, 2 டிரா என புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஐந்து தோல்விகளை பெற்றுள்ள சியாட்டில் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பதோடு அடுத்த சுற்றில் இருந்து வெளியேறியும் இருக்கிறது.

- Advertisement -