MLC 2024: 19 ஓவர்கள்.. பழைய இந்திய ஹீரோ உன்முக்த் சந்த் அதிரடி பேட்டிங்.. நைட் ரைடர்ஸ் வெற்றி

0
253
Unmukth

நடப்பு இரண்டாவது எம்எல்சி லீக்கில் 15ஆவது போட்டியில் சீட்டில் ஆர்கஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அண்டர் 19 அணிக்காக உலக கோப்பையை வென்று தற்போது அமெரிக்காவுக்கு விளையாடும் உன்முக்த் சந்த் அதிரடியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சீட்டில் ஆர்கஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. டி20 லீக்குகளில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து வரும் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரியான் ரிக்கல்ட்டன் துவக்க வீரராக வந்து 52 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்கள் உடன் 89 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து அந்த அணியில் கேப்டன் ஹென்றி கிளாசன் மட்டுமே இரட்டை இலக்கத்தை தொட்டு 23 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். மற்ற ஆறு பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களை தாண்டவில்லை. 20 ஓவர்களில் அந்த அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த இங்கிலாந்தின் ஜேசன் ராய் 24 பந்தில் 27 ரன்கள், கேப்டன் சுனில் நரைன் 7 பந்தில் 8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து பேட்டிங்கில் மூன்றாவதாக வந்த, இந்தியாவிற்காக அண்டர் 19 உலக கோப்பையை வென்று தற்போது அமெரிக்காவுக்கு விளையாடும் பேட்ஸ்மேன் உன்முக்த் சந்த் சிறப்பாக விளையாடி 47 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் குவித்தார். இந்த முறை இவரை டி20 உலகக்கோப்பை அமெரிக்க அணியிலும் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ரொம்ப சிம்பிள்.. இங்கிலாந்து அணிக்கு எதிராக இதை செய்தால் போதும்.. ஈஸியா ஜெயிக்கலாம் – வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பேச்சு

இறுதியாக லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி 19.1 ஓவரில் ஆறு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சீட்டில் ஆர்கஸ் அணியின் தரப்பில் பந்துவீச்சில் கேமரூன் கனன் மற்றும் ஹர்மீட் சிங் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -