டி20 உலக கோப்பையை தந்த.. ரோகித் செய்த அந்த மாற்றம்.. கம்பீர் அனுமதிப்பாரா?.. முன்னிற்கும் முக்கிய சவால்

0
49
Gambhir

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து பதவிக்காலம் முடிவடைந்ததால் ராகுல் டிராவிட் விலகி இருக்கிறார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றிருக்கிறார். இந்த நிலையில் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்கும் கவுதம் கம்பீர் இந்திய டி20 அணியில் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் செய்திருந்த ஒரு முக்கிய மாற்றத்தை தொடர்வாரா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரை இந்திய அணி வென்றதற்கு மிக முக்கிய காரணமாக விராட் கோலியை துவக்க இடத்திலும் ரிஷப் பண்ட்டை மூன்றாவது இடத்திலும் கொண்டு வந்தது அமைந்திருக்கிறது. இது பலரும் பார்க்காத ஒரு கோணமாகவும் இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணி மொத்தமாக அதிரடியாக விளையாட வேண்டும் என்றால் பவர் பிளேவில் விராட் கோலி துவக்க வீரராக விளையாடினால்தான் சரியாக இருக்கும். அதே சமயத்தில் ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தில் ரிஷப் பண்ட் விளையாடினால் ஆட்டத்தை முடித்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பு இருக்கும். ஆனால் அவர் விளையாடும் முறைக்கு இந்தப் பொறுப்பு சரிவராது. எனவே அவர் மூன்றாவது இடத்தில் விளையாடும் பொழுது, அவர் அதிரடியாக விளையாட சீக்கிரத்தில் ஆட்டம் இழந்தாலும் கூட அடுத்து வரக்கூடியவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

எனவே பேட்டிங் வரிசையில் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் செய்திருந்த இந்த மாற்றம் மிகவும் முக்கியமானதாக ஆனால் மறைமுகமானதாக இருந்தது. தற்போது இந்திய டி20 அணியில் ரிஷப் பண்ட்க்கு கொடுக்கப்பட்டிருக்கும் மூன்றாவது இடத்தை புதிய தலைமை பயிற்சியாளர் கதம் கம்பீர் அனுமதிப்பாரா? என்பதுதான் கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.

- Advertisement -

ஏனென்றால் கம்பீர் ஆரம்ப முதல் சஞ்சு சாம்சனை ஆதரித்து வந்திருக்கிறார். நாளை சஞ்சு சாம்சன் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் போய் அவருடைய கிரிக்கெட் கேரியர் பாதிக்கப்பட்டால், இழப்பு அவருக்கு கிடையாது இந்திய கிரிக்கெட் வாரியத்துக்குதான், ஏனென்றால் அவர் மிகவும் திறமையானவர் என்று கவுதம் கம்பீர் பேசி வந்திருக்கிறார்.

இதையும் படிங்க : பும்ரா பவுலிங்ல அடிச்சு விளையாட கனவு கண்டேன்.. மனசு சரியாக 2 நாள் ஆச்சு – அமெரிக்க கேப்டன் பேச்சு

இந்த நிலையில் அவர் வருகின்ற இலங்கை தொடரில் இந்திய டி20 அணியின் பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தை ரிஷப் பண்ட்க்கு தருவாரா? இல்லை அவருடைய விருப்பமான வீரரான சஞ்சு சாம்சனுக்கு தருவாரா? என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே சுவாரசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிலர் ரிஷப் பண்ட்டை கவுதம் கம்பீர் வெளியில் கூட வைக்கலாம் என்றும் கூறுகிறார்கள். இருவரும் விக்கெட் கீப்பர்கள், இருவருமே ஒரே இடத்தில் விளையாட போட்டியிடுகிறார்கள் என்பதுதான் இதில் இருக்கும் தலைவலியான விஷயமாக தற்போது அமைந்திருக்கிறது!

- Advertisement -