டி20 உலககோப்பை பைனல்.. 30 பந்துக்கு 30 ரன்.. அப்ப இப்படித்தான் இருந்தேன் – ரோகித் சர்மா ஓபன் டாக்

0
6556

இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்று சில வாரங்கள் ஆகிவிட்டாலும் அதனுடைய தாக்கம் இன்னமும் குறைந்தபாடில்லை.

சமீபத்தில் அமெரிக்காவின் டல்லாஸில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி ஐந்து ஓவர்களில் தனது மனநிலை எப்படி இருந்தது என்பது குறித்து சில முக்கியமான கருத்துக்களைக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தத் தொடரில் லீக் சுற்று முதல் தோல்வியே சந்திக்காத இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. விராட் கோலி மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோரின் அதிரடியில் 20 ஓவர்களில் 176 ரன்கள் குவித்தது. பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்க அணிக்கு கிளாஸனின் அதிரடியால் கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் என்று நிலைக்கு வந்துவிட்டது.

கடைசியில் வெற்றியின் விளிம்பில் இருந்த தென்னாப்பிரிக்க அணியை மறுபடியும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை திரும்பவும் இந்திய அணியின் பக்கம் கொண்டு வந்தனர். இந்த சூழ்நிலையில் கடைசி ஐந்து ஓவர்களில் தான் வெறுமையாக உணர்ந்ததாகவும், ஆனால் அமைதியாக இருந்தால்தான் தனது திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றும் ரோஹித் சர்மா சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து ரோகித் சர்மா விரிவாக கூறும்பொழுது “ஆமாம். நான் அந்த சமயத்தில் முற்றிலும் வெறுமையாக உணர்ந்தேன். என் மனதில் எதுவுமே ஓடவில்லை. நான் எதைப் பற்றியும் அதிகமாக சிந்திக்காமல் முழுமையாக ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.இந்த சமயத்தில் நானும் எனது அணி வீரர்களும் அமைதியாக இருந்து எங்கள் திட்டங்களை செயல்படுத்துவதில் கவனமாக இருந்தோம்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்டபோது, நாங்கள் அழுத்தத்தில் இருந்த சூழ்நிலையிலும் நாங்கள் வீசிய ஐந்து ஓவர்கள் நாங்கள் எவ்வளவு அமைதியாக இருந்தோம் என்பதை காட்டியது. எதைப் பற்றியும் யோசிக்காமல் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தினோம். நாங்கள் அந்த சமயத்தில் அச்சப்படாமல் இருந்தது எங்கள் தரப்பில் ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்பட்டது” என்று ரோஹித் சர்மா கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:இந்திய அணி வெளி கிரகத்து டீமா?.. ருதுராஜுக்கு இது நடந்தே ஆகணும் – ஹர்ஷா போக்லே கருத்து

கடைசி ஐந்து ஓவர்களில் இந்திய அணியின் செயல்பாடு தாங்கள் உலகக் கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணி என்பதை நிரூபித்து காட்டியது. அதிலும் குறிப்பாக பும்ரா வீசிய அந்த இரண்டு ஓவர்கள் சரிந்து போன இந்திய ரசிகர்களின் மனநிலையை தூக்கி நிறுத்தியது என்றே கூறலாம்

- Advertisement -