ஐபிஎல்-லை பொறுத்தவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மதிப்புமிக்க அணிகளில் ஒன்றாக கருதப்பட்டாலும் இன்னும் ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாதது அந்த அணியின் மதிப்புக்கு ஒரு கரும்புள்ளியாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய முன்னாள் வீரர் பார்த்திவ் பட்டேல் அணியில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து பேசி இருக்கிறார்.
ஐபிஎல்லைப் பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இந்த மூன்று அணிகளும் அதிக ரசிகர் பட்டாளர்களைக் கொண்ட அணியாக கருதப்படுகிறது. காரணம் அந்த அணியில் இருக்கும் மகேந்திர சிங் தோனி, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு தனிநபர் முக்கியத்துவமாக அதிக ரசிகர்கள் இருக்கின்றனர்.
ஆனால் சென்னை மற்றும் மும்பை அணிகளில் ரோகித் சர்மா மற்றும் தோனியை தவிர்த்து அணிகளின் நலன் சார்ந்து பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரு துறைகளிலும் தரமான வீரர்கள் வாங்கப்படுகிறார்கள். அது மட்டுமல்லாமல் திறமையான இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களை சர்வதேச அணிக்குள் புகுத்தவும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் பெங்களூர் அணியை பொறுத்தவரை குறிப்பிட்ட மூன்று அல்லது நான்கு வீரர்களை தவிர்த்து திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இளம் வீரர்கள் குறைவாக இருக்கின்றனர்.
தற்போதுதான் அந்த அணியில் பட்டிதார் மற்றும் சொப்னில் சிங் போன்ற இளம் வீரர்கள் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் ஆர்சிபி அணிக்காக ஐபிஎல்லில் விளையாடிய இந்திய முன்னாள் வீரர் பார்த்திவ் பட்டேல் ஆர்சிபி தனிநபர் சார்ந்த வீரர்களுக்கே அதிக முக்கியத்துவம் தருவதாக சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து பார்த்தீவ் பட்டேல் விரிவாக கூறும் பொழுது “நான் ஆர்சிபி அணிக்காக நான்கு வருடங்கள் ஐபிஎல்லில் விளையாடி இருக்கிறேன். பெரும்பாலும் அது தனிநபர் பற்றியதாக மட்டுமே இருக்குமே தவிர அணி சார்ந்து ஒருபோதும் இருக்காது. இதனால்தான் பெரும்பாலான வீரர்கள் அந்த அணியில் இருந்து வெளியே வரும்போது இதையே கூறுவார்கள். ஏனென்றால் நான் ஆர்சிபி அணியில் இருந்த போது விராட் கோலி டிவில்லியர்ஸ் மற்றும் கெயில் போன்ற வீரர்களுக்கே அதிக முக்கியத்துவம் இருக்கும்.
இதையும் படிங்க:கில் நல்ல கேப்டனா வர முடியாது.. ருதுராஜ்தான் சரி.. ஆனா அவர் பின்னால யாரும் இல்ல – இந்திய முன்னாள் வீரர் கருத்து
அதனால் எப்போதுமே அவர்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கப்பட்டது. எனவே அங்கு அணி கலாச்சாரம் என்பது கிடையாது. இதை அவர்கள் விளையாடும் போது நீங்கள் தெளிவாக பார்க்க முடியும். இதனால்தான் தற்போது வரை பெங்களூரு அணி இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வெல்லம் முடியவில்லை” என்று பார்த்தீவ் பட்டேல் கூறியிருக்கிறார்.






