நான் பிளேயரா ஜெயிக்கிறதை விட.. டீம்ல இத கட்டாயம் உருவாக்கறது முக்கியம் – சஞ்சு சாம்சன் பேட்டி

0
671

இந்திய அணியில் இடம் பிடிக்க நீண்ட காலமாக போராடிவரும் முக்கிய வீரரான சஞ்சு சாம்சன் சமீபத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

இந்த சூழ்நிலையில் சஞ்சு சாம்சன் இந்திய அணி குறித்தும் தாம் உருவாக்க வேண்டிய உறவுமுறை குறித்தும் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஜிம்பாவேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 போட்டிகள் விளையாடிய நிலையில் மூன்றாவது போட்டியில் இருந்து இந்திய அணியில் இணைந்த சஞ்சு சாம்சன் கடைசி போட்டியில் சிறப்பாக விளையாடி 45 பந்துகளில் 58 ரன்கள் குவித்து சரிவில் இருந்த இந்திய அணியை மீட்டார். சில வருடங்களுக்கு முன்பாகவே இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தாலும் நிலையற்ற செயல்பாட்டினால் அவ்வப்போது அணிக்குள் வருவதும் போவதுமாய் இருந்தார்.

சமீபகாலமாக ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக சாம்சன் சிறப்பாக விளையாடி வருவதால் தற்போது அவருக்கு இந்திய அணியிலும் இடம் கிடைத்தது. உலகக்கோப்பை தொடரில் களமிறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அது அவருக்கு நல்ல ஒரு அனுபவமாக இருந்திருக்கும். அந்த அனுபவமே தற்போது இந்திய அணியில் ஒரு சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்த உதவியிருக்கிறது.

- Advertisement -

ஐந்தாவது போட்டி குறித்து பேசிய சஞ்சு சாம்சன் “நாங்கள் தொடக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்ததால் ரியானுடன் ஒரு பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்த வேண்டிய தேவை இருந்தது. பின்னர் ஒரு நல்ல இலக்கை எதிரணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்க முடிந்தது. இந்த தொடரில் எங்கள் பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்து வீசினார்கள். மேலும் அணிக்குள் உறவை வளர்ப்பது குறித்து பேசிய சாம்சன் “நிச்சயமாக அணி வீரர்களுக்கு எதையும் கற்பிக்க முடியாது என்று நினைக்கிறேன்.

உண்மையில் அவர்களோடு ஒன்றாக இருக்கவும், ஒருங்கிணைந்து செல்லவும் முடியும்.நீங்கள் எப்போது ஒரு உறவை உருவாக்க விரும்புகிறீர்களோ அப்போதுதான் மக்கள் உங்களை நேசிப்பார்கள். அவர்கள் விரும்பும் போதெல்லாம் என்னை வந்து அணுகுவது அவர்களுக்கு நான் ஒரு சகோதரன் போன்ற உணர்வை கொடுக்கும். இது மிகவும் முக்கியமான ஒன்று என்று நினைக்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:இந்திய அணியில் பிடித்த வீரர் யார்.. பும்ராவா விராட் கோலியா? – ரோகித் சர்மா வித்தியாசமான பதில்

டி20 ஃபார்மெட்டில் இருந்து மூன்று முக்கிய வீரர்கள் ஓய்வு அறிவித்திருப்பதால் இனி வரும் போட்டிகளில் சாம்சன் அணியில் நிச்சயம் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் விளையாடிய அனுபவமும் ஐபிஎல் அனுபவமும் இருப்பதால் சஞ்சு சம்சனுக்கு இது பெரிதளவில் கைகொடுக்கும் என்று நம்பலாம். இனி வரும் தொடர்களில் இவரது பெரிய இன்னிங்ஸ்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

- Advertisement -