மழையால் இனி கவலை இல்லை.. புதுமையான கிரிக்கெட் ஸ்டேடியத்தை தயார் செய்யும் ஆஸ்திரேலியா.. இதுவரை இல்லாத சிறப்பம்சங்கள்

0
1164
Australia

தற்பொழுது ஆஸ்திரேலியா ஹோபர்ட் நகரில் புதுமையான முறையில் மற்றும் ஏற்கனவே இருந்த பிரச்சனைகள் எல்லாவற்றையும் நீக்கி மூடப்பட்ட மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டை நடத்தும் அளவுக்கு ஒரு புதுமையான மைதானம் கட்டப்பட்டிருக்கிறது. இது 2028 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே மெல்போனில் மார்வெல் மைதானம் மேற்கூரை போடப்பட்டு கட்டப்பட்டது. இங்கு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆனாலும் கூட இங்கு டெஸ்ட் கிரிக்கெட் நடத்தப்பட்டது கிடையாது. இந்த நிலையில் தான் எல்லா வடிவ கிரிக்கெட்டையும் நடத்தும் அளவுக்கு மூடப்பட்ட மைதானம் டாஸ்மெேனியா ஹோபர்ட்டில் கட்டப்பட்டு வருகிறது.

- Advertisement -

மேற்கூரை இடப்பட்ட மைதானங்களில் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் மைதானம் மூடப்படுவதற்கு மின் கம்பங்கள் உயரம் பிரச்சினையாக இருக்கும். இதற்கு அடுத்து மேற்கூரையின் உயரமும் இன்னொரு பிரச்சினையாக இருக்கும்.

தற்பொழுது இந்த மைதானத்தில் பிளட்லைட் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மின் கம்பங்கள் தேவையில்லை மைதானத்தை சுற்றிலும் கேலரி முகப்பில் விளக்குகள் வைக்கப்படும். இதேபோல் மைதான கூரையின் உயரம் 50 மீட்டருக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. இதுவரையில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் பந்தை 50 மீட்டர் உயரத்திற்கு அடித்தது கிடையாது. மற்றபடி 100 மீட்டர் நீளத்திற்கு சிக்ஸர் அடித்திருக்கிறார்கள். எனவே பந்து எந்த நிலையிலும் மேற்கூரையின் மேல் போய் படவே படாது.

- Advertisement -

உலகில் இருக்கும் கிரிக்கெட்டில் தட்பவெப்ப நிலையும் ஒரு பங்கை கொண்டிருக்கும் விளையாட்டாக கிரிக்கெட் இருந்து வருகிறது. மழை மற்றும் வெயில் மேலும் மேகமூட்டமான குளிர் சூழ்நிலை, பனிப்பொழிவு ஆகியவை ஆடுகளம் மற்றும் பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்பொழுது இப்படியான மைதானத்தால் இதைக் குறைக்க முடியும்.

இதையும் படிங்க : சச்சின் கிடையாது.. இந்த 3 பேர்தான் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் – சுரேஷ் ரெய்னா ஆச்சரியமான தேர்வு

மிக முக்கியமாக மழையால் போட்டி நடைபெறாமல் போவது தவிர்க்கப்படும். ஏற்கனவே மெல்போனில் கட்டப்பட்ட மார்வெல் மேற்கூரை கொண்ட மைதானத்தில் மின்விளக்கு கம்பங்களும், மேற்கூரையின் உயரமும் ஒரு பிரச்சினையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இந்த டாஸ்மேனியா ஹோபர்ட் மைதானத்தில் இந்த இரண்டு முக்கிய பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு இருக்கிறது. மேலும் 23 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்படுகிறது. அத்துடன் முதல் முறையாக இப்படியான ஒரு மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டை நடத்த, மைதானத்திற்கு ஐசிசி ஒப்புதலை பெறுவதற்கான வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது!

- Advertisement -