இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்த பிறகு, துணை பயிற்சியாளராக யார் வருவார்கள்? கம்பீர் யாரை துணை பயிற்சியாளர்களாகக் கேட்டிருக்கிறார்? என்பது குறித்து நிறைய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் ஒருவரை கேட்டிருப்பதாகவும் தகவல்கள் வருகிறது.
இந்திய அணிக்கு யார் தலைமை பயிற்சியாளர்களாக வருகிறார்கள் அவர்களின் விருப்பப்படியே துணை பயிற்சியாளர்களும் நியமிக்கப்படுவார்கள். மொத்த பயிற்சி குழுவும் தலைமை பயிற்சியாளரின் விருப்பத்தின்படி கட்டுப்பாட்டில் இருக்கும். இது இணைந்து பணி செய்வதற்கு சுமுகமான சூழலையும் புரிதலையும் உண்டாக்கும் என்பதால் இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த முறையில் செயல்படுகிறது.
இந்த நிலையில் கம்பீர் பேட்டிங் பயிற்சியாளராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயரை கேட்டதாக செய்திகள் வந்தது. மேலும் அவரே இந்த பதவிக்கு வருவதற்கு 99 சதவீதம் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. எனவே பயிற்சியாளர் குழுவில் பேட்டிங் பயிற்சியாளர் பிரச்சனை தீர்ந்து விட்டது. மேலும் பில்டிங் பயிற்சியாளராக பழைய பயிற்சியாளர் திலீப் அவர்களே தொடர்வார் என்றும் செய்திகள் வந்தது.
தற்போதைய சூழ்நிலையில் இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் யார்? என்பதுதான் பெரிய கேள்வியாக இருந்து வருகிறது. முதலில் இதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஏற்கனவே விளையாடி இருக்கும் கர்நாடக மற்றும் இந்திய அணிக்காக விளையாடிய வினய் குமாரை கம்பீர் கேட்டதாக செய்திகள் வந்தது.
இதற்கடுத்து இந்த பதவிக்கு மேலும் இந்தியா மற்றும் சிஎஸ்கே அணிக்கு விளையாடிய லட்சுமிபதி பாலாஜி மற்றும் இந்திய அணியின் லெஜன்ட் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் ஆகியோரது பெயரையும் கம்பீர் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இந்திய கிரிக்கெட் வளர்ச்சிக்கு இந்த 3 பேர் பெருசா பண்ணிட்டாங்க.. ஆனா டிராவிட் செய்தது ஆச்சரியம் – விவிஎஸ் லக்ஷ்மன் பேட்டி
தற்போது இந்த பட்டியலில் கம்பீர் முன்னாள் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் மற்றும் முன்னாள் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பெயரையும் கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு இறுதி வரையில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்தார். மேலும் ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு கம்பீர் மென்டராக இருந்த பொழுது அதே அணியில் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இவர் இருந்தார். எனவே புதிய இந்திய பந்துவீச்சு பயிற்சியாளராக இவர் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது!






