ருதுராஜ் அபிஷேக் சர்மா.. நாளை யார் ஓபனர்?.. இந்திய அணியின் திட்டம் என்ன? – கேப்டன் கில் பேட்டி

0
1114
Gill

இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் டி20 உலகக்கோப்பை கைப்பற்றிய நிலையில், இளம் வீரர் சுப்மன் கில் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வே சென்று அந்த நாட்டு அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை துவங்க உள்ள நிலையில் கேப்டன் சுப்மன் கில் தொடர் குறித்து பேசி இருக்கிறார்.

இந்த தொடரில் நடக்க இருக்கும் ஐந்து போட்டிகளும் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடக்கின்றன. நாளை 6ம் தேதி அடுத்து 7, 10, 13, 14ஆம் தேதிகளில் மற்ற போட்டிகள் நடைபெற்று தொடர் முடிவுக்கு வருகிறது. மேலும் அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு துவங்குகிறது.

- Advertisement -

இந்தப் போட்டிக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் மற்றும் சிவம் துபே மூவரும் டி20 உலகக் கோப்பை வெற்றி கொண்டாட்டத்தில் இருக்கின்ற காரணத்தினால், மாற்று வீரர்களாக முதல் இரண்டு போட்டிக்கு ஹர்ஷித் ராணா, ஜிதேஷ் சர்மா, சாய் சுதர்சன் ஆகியோர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் நாளை கேப்டன் சுப்மன் கில் உடன் துவக்க ஆட்டக்காரராக அபிஷேக் ஷர்மா இல்லை ருதுராஜ் இருவரில் யார் களமிறங்குவார்கள்? என்பது குறித்தும், இந்தத் தொடரில் இந்திய அணியின் திட்டம் என்ன என்பது குறித்தும் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து சுப்மன் கில் கூறும் பொழுது “நாளை துவக்க வீரராக என்னுடன் அபிஷேக் சர்மா களமிறங்குவார். ருதுராஜ் மூன்றாவது இடத்தில் களமிறங்குவார். நான் ஐபிஎல் தொடரில் தற்பொழுது கேப்டனாக இருந்த பொழுது நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். என்னைப் பற்றியும் கேப்டன் பொறுப்பில் இருக்கும் விஷயங்கள் பற்றியும் தெரிந்து கொண்டேன். கேப்டனாக நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களில் மனநிலை சார்ந்தது மிகவும் முக்கியமானது.

இதையும் படிங்க : என்னோட பெருமை ஈகோவ இதுக்காக தள்ளி வச்சேன்.. ரோகித் டிராவிட்கிட்ட நொந்து போய் சொன்னேன் – விராட் கோலி பேட்டி

டி20 உலகக்கோப்பையில் விளையாடிய அணியில் இருந்து இது முற்றிலும் மாறுபட்ட அணி. நான் உட்பட அணியில் நிறைய இளம் வீரர்கள் இருக்கிறார்கள். எனவே வீரர்களுக்கு சர்வதேச போட்டி அனுபவத்தை கேப்டனாக வழங்க நினைக்கிறேன். அணியில் நிறைய வீரர்கள் நிறைய சர்வதேச போட்டிகளில் விளையாடியதில்லை. மேலும் சில அறிமுகமாக இருக்கிறார்கள். எனவே இந்த தொடரில் எங்களுடைய நோக்கம் வீரர்களுக்கு சர்வதேச போட்டி அனுபவத்தை கொடுப்பதுதான்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -