வெஸ்ட் இண்டீஸில் மோசமான சூழ்நிலையில் சிக்கிய இந்திய அணி.. தனி விமானம் அனுப்ப ஜெய் ஷா திட்டம்.. என்ன நடக்கிறது?

0
473
BCCI

இந்திய அணி ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை தொடரின் சனிக்கிழமை காலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. தற்போது வரை இந்திய அணி இறுதிப் போட்டி நடைபெற்ற பார்படாசில் சிக்கி இருக்கிறது. அங்கு கடுமையான புயல் தாக்க இருக்கின்ற காரணத்தினால் இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய வீரர்களை மீட்க யோசனைகள் செய்து வருகிறது.

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற முடிந்தது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ரிசர்வ் நாளாக கொண்டிருந்தது. இதன் காரணமாக இந்திய அணி நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் திங்கட்கிழமை செய்யப்பட்டிருந்தன. இதனால் இந்திய வீரர்கள் அங்கு தங்கியிருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் பெரில் எனும் புயல் பலத்த சூறாவளி காற்றுடன் இறுதிப் போட்டி நடைபெற்ற பார்படாசை ஞாயிற்றுக்கிழமை இரவு அல்லது திங்கள்கிழமை காலையில் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோசமான பாதிப்புகளை இந்த புயல் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக பார்படாஸ் விமான நிலையங்கள் நேற்று ஞாயிறு இரவு 8 மணிக்கு மூடப்பட்டு விட்டன. எனவே இந்திய அணி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த முறையில் திங்கட்கிழமை கிளம்பி நியூயார்க் சென்று அங்கிருந்து இந்தியா வருவதற்கான வாய்ப்புகள் முடிவடைந்துவிட்டது.

- Advertisement -

எனவே இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா இந்திய அணியை அழைத்துக் கொண்டு வர தனி விமானத்தை ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்திய குழுவில் மொத்தம் 70 பேர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் கொண்டு வருவதற்கான தனி விமானம் வெஸ்ட் இண்டீஸில் இல்லை என்று சொல்லப்படுகிறது. தற்போது இது குறித்து தீவிர தேடுதல் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : நீங்கள் செய்த 2 சம்பவம் டி20 வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும்.. உங்களால் ஓராண்டில் எவ்வளவு மாற்றம்- சேவாக் பாராட்டு

மேலும் இந்திய ஊடகக் குழுவும் தற்பொழுது அங்கு தான் சிக்கி இருக்கிறது. அந்த சிக்கி இருக்கும் இந்திய ஊடகவியலாளர் ஒருவர் கூறும் பொழுது ” பெரில் சூறாவளி ஞாயிறு இரவு அல்லது திங்கள்கிழமை காலை பார்படாசை தாக்கும். எனவே இங்கு விமான நிலையங்கள் மூடப்பட்டு விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.சூறாவளி வந்து தனியும் வரையில் இந்திய அணியும் இங்கு சிக்கிக் கொள்ளக்கூடும். நாங்களும் இங்குதான் இருக்கிறோம். அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுகிறத” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -