அட விராட் கோலிய விடுங்க.. சூப்பர் பிளேயர் இவர பத்தி இனிமே பேசுங்க – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேட்டி

0
31
Virat

இந்திய அணி இன்று டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் எட்டு சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி அரையிறுதி சுற்றை ஏறக்குறைய எட்டி விடும். இந்த நிலையில் விராட் கோலி பற்றி அதிகம் பேசக்கூடாது என இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியிருக்கிறார்.

நடப்பு டி20 உலக கோப்பை முதல் சுற்றில் விராட் கோலி முதல் மூன்று போட்டிகளில் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில் அமெரிக்க அணிக்கு எதிராக அவர் கோல்டன் டக் ஆனார். இதன் காரணமாக அவர் பேட்டிங் குறித்து நிறைய பேச்சுகள் வெளியில் சென்று கொண்டிருந்தன.

- Advertisement -

இந்த நிலையில் சூப்பர் 8 சுற்றுக்கு வெஸ்ட் இன்டிஸ்க்கு திரும்பும் பொழுது விராட் கோலி சிறப்பாக திரும்பி வருவார் என்று பல முன்னாள் வீரர்கள் கருத்து கூறியிருந்தார்கள். ஆனால் 24 பந்துகள் சந்தித்த விராட் கோலி 24 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.

இதன் காரணமாக இன்றைய போட்டியில் விராட் கோலி ஏதாவது பெரிதாக செய்வாரா? என்கின்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. மேலும் அவர் பேட்டிங் குறித்த விவாதங்களும் பெரிய அளவில் வெளியில் சென்று கொண்டிருக்கிறது. தற்பொழுது விராட் கோலியை மட்டுமே குறிவைத்த இப்படியான பேச்சுகள் அதிகம் இருக்கக் கூடாது என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “இந்திய கிரிக்கெட்டை பற்றி நாம் அதிகம் சிந்திக்க வேண்டும். அதே சமயத்தில் விராட் கோலி ஃபார்மில் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து நாம் அதிகம் சிந்திக்கவே கூடாது. இது அவசியமற்ற ஒன்று.

இதையும் படிங்க : தோனி என் பவுலிங்ல திணறுவாரு.. அவர்கிட்ட 2009-ல இந்த கோல் வச்சி அத முடிச்சேன் – அஸ்வின் வெளியிட்ட சுவாரசிய தகவல்

ஐபிஎல் தொடரில் ஈடன் கார்டன் மைதானத்தில் சுனில் நரைனை போலவே, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் என இரண்டு நாடுகளிலும் நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் பும்ரா அசத்தலாக இருந்து வருகிறார். மற்ற அணிகளில் இருக்கும் சிறந்த பந்துவீச்சாளர்களை பார்க்கும் பொழுது, அவர் யாரையும் விட சிறந்தவராக இருக்கிறார். மற்றவர்களுக்கும் இவருக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. அவர் இந்திய பிளேயிங் லெவனில் இருப்பது நம்முடைய அதிர்ஷ்டம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -