டி20 உலக கோப்பை சூப்பர் 8 போட்டியில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் பல பரீட்சை நடத்த இருக்கின்றன.
இந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளை பெற்று இன்று வங்கதேச அணியோடு மோத உள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்து பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
லீக் சுற்றில் தோல்வியே பெறாத இந்திய அணி தற்போது அடுத்த சுற்றிலும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இன்று வங்கதேச அணியை எதிர்கொள்ள உள்ளது.
இன்று நடைபெறுகிற போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெறுவது என்பது ஏறக்குறைய உறுதியாகி விடும். இந்தத் தொடரில் வங்கதேச அணியும் ஓரளவு கவனிக்க கூடிய அணியாகவே உள்ளது.
முதல் சுற்றில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய வங்கதேச அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளது. இதனால் அரை இறுதி வாய்ப்பில் நீடிக்க இந்த போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற கடுமையாக முயற்சிக்கும். இதனால் இந்த போட்டி பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என இரண்டு துறைகளிலும் வலுவாக உள்ள இந்திய அணி பேட்டிங் மற்றும் சற்று தடுமாற்றமாக உள்ளது.
குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி பேட்டிங்கில் ஓப்பனிங் களம் இறங்கி தொடர்ந்து தடுமாறி வருவது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இவரது பழைய பாணியிலேயே மூன்றாவது வரிசையில் களமிறங்க வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் விராட் கோலியின் பேட்டிங் ஆர்டர் குறித்து நிருபர் கேட்ட கேள்விக்கு முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து விக்ரம் ரத்தோர் கூறும் பொழுது “விராட் கோலி ஓப்பனிங் செய்வது உங்களுக்கு மகிழ்ச்சியாக இல்லையா? அவர் ஓபனிங் செய்ய வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் இப்போது அது குறித்து சிந்திக்கவில்லை. எங்களிடம் இருக்கும் பேட்டிங் ஆர்டர் குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ஒருவேளை பேட்டிங் ஆர்டரில் மாற்றங்கள் ஏதேனும் தேவைப்பட்டால் அது எதிரணி மற்றும் சூழ்நிலைகளைப் பொறுத்து மட்டுமே இருக்கும். இதனால் விராட் கோலியின் பேட்டிங் ஆர்டரும் இதனை பொருத்தே அமையும்” என்று விக்ரம் ரத்தோர் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:61/4 சரிந்த இங்கிலாந்து.. போட்டியை மாற்றிய 5 புல்டாஸ்.. திரில் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது
கடந்த மூன்று போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்த விராட் கோலி, கடைசியாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 24 பந்துகளில் 24 ரன்கள் குவித்து தனது பேட்டிங் ஃபார்மை ஓரளவு மீட்டெடுத்தார். இதனால் இன்றைய போட்டியில் விராட் கோலி நிச்சயம் தனது பேட்டிங்கை சரி செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






