நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாத அணிகளில் இருந்த இந்திய வீரர்கள் ரோகித் சர்மா தலைமையில் முதல் கட்டமாக அமெரிக்காவிற்கு வந்தார்கள். இதற்குப் பிறகு இரண்டாவது கட்டமாக சில வீரர்கள் வந்தார்கள். இந்த நிலையில் பயிற்சி வசதிகள் குறித்து இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவருடைய பாணியில் குறைகளை தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்கா வெகு வேகமாக கிரிக்கெட் விளையாட்டை தங்கள் நாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. உடனுக்குடன் ஒரு டி20 லீக்கையும் நடத்தி முடித்திருக்கிறது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டிஸ் நாட்கள் சேர்ந்து டி20 உலகக் கோப்பை தொடரையும் நடப்பும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறது.
மேலும் டி20 உலகக் கோப்பைக்கு நியூயார்க் நகரில் ஒரு வருட காலத்தில் ஒரு சிறந்த மைதானத்தை உருவாக்கி இருக்கிறது. மேலும் இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட ஆடுகளம் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கொஞ்சம் திறந்தவெளி மைதானமான இது பார்ப்பதற்கு நன்றாக உள்ளது.
அதே சமயத்தில் இந்த மைதானத்தின் தரைப்பகுதி மிகவும் மென்மையாக இருக்கிறது என்றும் இதனால் வீரர்கள் காயம் அடைவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்றும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பயிற்சி போட்டியில் விளையாடிய பொழுதே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாளை அயர்லாந்து அணிக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடுவதற்கு முன்பாக பேசிய ராகுல் டிராவிட் ” வெளிப்படையாக நீங்கள் ஒரு உலகக் கோப்பை தொடரில் பெரிய மைதானத்தில் இருப்பீர்கள். அல்லது பாரம்பரியமான ஒரு மைதானத்தில் இருப்பீர்கள். ஆனால் நாங்களோ ஒரு பூங்காவில் இருக்கிறோம் இங்குதான் பயிற்சி செய்கிறோம்.
இதையும் படிங்க : ரோகித் பாய் இந்த முக்கியமான வேலையை குடுத்திருக்காரு.. தோனி காட்டிய ரூட்ல போவேன் – ஷிவம் துபே பேட்டி
அமெரிக்கா போன்ற ஒரு புதிய நாட்டிற்கு வருவது வெளிப்படையாகஉற்சாகமாக இருக்கிறது. ஆனால் அமெரிக்கா போன்ற ஒரு நாட்டிற்கு டி20 உலக கோப்பையில் எட்டு போட்டிகள் கொடுக்கப்பட்டிருப்பது சற்று வித்தியாசமாக இருக்கிறது. இந்த நாட்டில் கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் இல்லை. இப்பொழுதுதான் அதை நோக்கி வர ஆரம்பித்து இருக்கிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.






