கோச் கேப்டன் என்கிட்ட இதைத்தான் சொன்னாங்க.. பேட்டிங் பண்றப்பயே தெரிஞ்சிருச்சு – ஷாபாஷ் அகமத் பேட்டி

0
164
Ahmad

நேற்று ஐபிஎல் தொடரில் இரண்டாவது தகுதி சுற்றில் ராஜஸ்தான் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஹைதராபாத் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஷாபாஷ் அகமது ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றிக்குப் பின் போட்டி குறித்து அவர் பேசியிருக்கிறார்.

குறிப்பிட்ட இந்தப் போட்டியில் ராஜஸ்தான் டாஸ் வெல்ல ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹென்றி கிளாசன் 50 ரன்கள் எடுத்தார். ராகுல் திரிபாதி 37 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் போல்ட் மற்றும் ஆவேஸ் கான் இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவர் பிளே முடிந்து 60 ரன்கள் தாண்டி நல்ல நிலையிலேயே இருந்தது. இன்று நான்கு பந்துவீச்சாளர்கள் மட்டுமே ஹைதராபாத் அணியில் இருக்க, ஐந்தாவது பந்துவீச்சாளராக பகுதி நேர பந்துவீச்சாளர் ஷாபாஷ் அகமதை பயன்படுத்த வேண்டிய தேவை கேப்டன் கம்மின்ஸ்க்கு இருந்தது.

உள்ளே பந்துவீச்சுக்கு வந்த ஷாபாஷ் அகமத் உடனடியாக 21 பந்தில் 42 ரன் எடுத்து சிறப்பாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் விக்கெட்டை கைப்பற்றினார். அடுத்து உடனே கேப்டன் சஞ்சு சாம்சன் விக்கெட்டையும் கைப்பற்றினார். மேற்கொண்டு விக்கெட் வீழ்ச்சியை தடுக்க அனுப்பப்பட்ட அஸ்வின் விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்த இடத்திலேயே ராஜஸ்தான் அணியை விட்டு போட்டி கைமீறி சென்று விட்டது. அந்த அணி 20 ஓவர்களில் 139 ரன்கள் எடுத்து 36 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

- Advertisement -

ஆட்டநாயகன் விருது பெற்ற ஷாபாஷ் அகமத் கூறும்பொழுது ” அணிக்குத் தேவைப்பட்டால் என்னை இம்பேக்ட் பிளேயர் ஆக பயன்படுத்துவேன் என பயிற்சியாளர் மற்றும் கேப்டன் எனக்கு கூறியிருந்தார்கள். அணிக்கு விக்கெட் சரிந்த காரணத்தினால் எனக்கு விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும் பேட்டிங்கில் என்னுடைய வேலை லோயர் ஆர்டரில் விளையாடுவதுதான்.

இதையும் படிங்க : கம்மின்ஸ்க்கு பிரஷர் குடுத்து பவுலிங் வாய்ப்ப வாங்கினேன்.. அப்பா கூட வேலை செஞ்சேன் – அபிஷேக் ஷர்மா பேட்டி

நான் பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது சந்திப் மற்றும் ஆவேஷ் இருவரும் பந்து வீசிய விதத்தில் ஆடுகளத்தில் பந்துவீச்சுக்கு கொஞ்சம் சாதகம் இருப்பதை உணர்ந்தேன். இது போன்ற ஒரு பெரிய ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது என்னுடைய கனவு. இன்று அது நடைபெற்றதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களுடைய அணியில் நல்ல நிதானமான நிலைமை காணப்படுகிறது. இறுதிப் போட்டியில் வென்ற பிறகுதான் கொண்டாடுவோம். இன்று இரவு ஓய்வெடுப்போம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -