“உலக கோப்பையில் இந்தியாவிடம் அடிபணியாத ஒரே அணி நியூசிலாந்துதான்.. ஆனா..!” – நாசர் ஹூசைன் பேச்சு!

0
1887
Hussain

இன்று 13வது ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் முதல் நாக் அவுட் மேட்ச் நடக்க இருக்கிறது. இதில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன.

நியூசிலாந்து அணிக்கு காயம்பட்டிருந்த கேப்டன் வில்லியம்சன் முதல் சில ஆட்டங்களில் விளையாடவில்லை. பிறகு வந்து முதல் ஆட்டத்திலேயே மீண்டும் காயமடைந்து, இறுதியாக கடைசியில் வந்து விளையாடினார்.

- Advertisement -

இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு இளம் துவக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்தரா கிடைத்திருக்கிறார். அவருடைய சிறப்பான ஆட்டம்தான் கேன் வில்லியம்சன் இல்லாத பொழுது நியூசிலாந்து அணியை அரை இறுதிக்கு கொண்டு வந்தது.

அவர் தற்போது அதிக ரன்கள் குவித்தவர்களில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். மேலும் இரண்டு அரை சதங்கள் 3 சதங்கள் என எந்த ஒரு நியூசிலாந்து வீரரும் செய்யாத சாதனைகளை செய்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியை பொறுத்தவரையில் எல்லோரும் உலகத்தரமான வீரர்கள். எல்லோருடைய பெயர்களுமே பெரிய பெயர்கள். தற்போது இந்திய அணியின் பலமாக பந்து வீச்சு மாறி இருப்பது, இந்திய அணிக்கு மிகப்பெரிய நேர்மறையான எண்ணத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளும் இன்று மோதிக்கொள்ள இருக்கின்ற காரணத்தினால், உலக அளவில் இந்த போட்டிக்கு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த போட்டி குறித்து பேசி உள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் ” இரண்டு அற்புதமான அணிகள். இதில் வெளிப்படையாக இந்தியாதான் ஃபேவரைட். ஆனால் இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியிடம் அடிபணியாத ஒரு அடி இருந்தால் அது நியூசிலாந்து அணியாகத்தான் இருக்கும். அவர்களிடம் சில வீரர்கள் அற்புதமான கடினமான கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள். அவர்களுக்கு இரட்சி ரவீந்தரா கிடைத்திருக்கிறார்.

நான் இன்றைய நாளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். மாலையில் வெளிச்சம் தாக்க தொடங்கும் பொழுது, விராட் கோலி பேட்டிங் செய்ய வரும் பொழுது, மின்சாரம் தாக்கியது போன்றான உணர்வு அங்கே இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -