“2023 இந்த உலக கோப்பை இந்திய அணிதான் இதுவரை சிறந்ததா?” – ரோகித் சர்மா வழக்கமான பாணியில் பதில்!

0
510
Rohit

13 வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி செயல்பட்டு வருவது இந்திய அணி ரசிகர்கள் எதிர்பாராத மகிழ்ச்சியானதாக அமைந்திருக்கிறது.

ஏனென்றால் நடப்பு உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணியின் முக்கிய வீரர்கள் காயமடைந்திருந்தார்கள். இதனால் யார் உலகக் கோப்பைக்கு கிடைப்பார்கள் என்பது குறித்து எந்த உறுதியும் இல்லை.

- Advertisement -

மேலும் உலகக் கோப்பைக்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் டி20 தொடரை இழந்த இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு போட்டியை தோற்று இரண்டு போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது.

இது இந்திய அணிக்கு பின்னடைவாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பார்க்கப்பட்டது. உலகக் கோப்பையை அருகில் வைத்துக் கொண்டு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு கொடுத்தது பெரிய சர்ச்சையை உருவாக்கியது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணி ஆசியக் கோப்பைக்கு பயணித்த பொழுது பெரிய நம்பிக்கை எதுவும் காணப்படவில்லை. மேலும் உடல் தகுதி முழுமை பெறாத ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே எல் ராகுல் இருவரும் அணியில் இடம் பெற்றதும் சர்ச்சையானது.

இந்த நிலையில் ஆசியக் கோப்பையில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த பொழுது, இந்திய அணியின் பலம் அசுரத்தனமாக இருந்தது. அது அப்படியே நடப்பு உலகக் கோப்பை தொடரிலும் தொடர்கிறது. எனவே இதுவரை உலக கோப்பையில் விளையாடிய இந்திய அணிகளில் இதுவே சிறந்த இந்திய அணி என்று சொல்லப்படுகிறது.

இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கேட்ட பொழுது “நான் 2011 உலகக் கோப்பை இந்திய அணியில் ஒரு அங்கமாக இருக்கவில்லை. மேலும் நான் 2015 ஆம் ஆண்டு மேனேஜ்மென்ட் குழுவில் இல்லை.

தற்போதைய அணியில் எல்லோருக்கும் அவர்களுடைய ரோல் என்னவென்று தெளிவாக இருக்கிறது. அதே சமயத்தில் 2015 ஆம் ஆண்டு இப்படி இல்லை என்று நான் சொல்லவில்லை. நான் அங்கம் வகித்த எல்லா அணிகளுமே ஆதிக்கம் செலுத்திய அணிகளாகவே இருந்தன.

உண்மையாக இதைப் பற்றி எல்லாம் இப்பொழுது யோசிப்பதற்கு நேரமே கிடையாது. இப்போதைக்கு அணிக்கு என்ன தேவையோ அதை செய்து முடிக்க வேண்டியது மட்டும்தான் இருக்கிறது. எதுவாக இருந்தாலும் இறுதி போட்டி முடிந்ததான் யோசிக்க முடியும்!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -