“அது 4 வருஷத்துக்கு முன்னால நடந்தது.. நியூசிலாந்தை பார்த்து எந்த பயமும் இல்ல!” – குல்தீப் யாதவ் பேட்டி!

0
1264
Kuldeep

நேற்று பெங்களூரில் நெதர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் சுற்று கடைசி போட்டியில் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!

இதற்கு அடுத்து இந்திய அணி நாளை மறுநாள் மும்பை வான்கடே மைதானத்தில் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறது.

- Advertisement -

கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை சந்தித்தது.

மழையின் காரணமாக இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்தது. மழை இந்திய அணியின் வாய்ப்பைப் பறித்து விட்டது.

- Advertisement -

இன்றும் இது இந்திய ரசிகர்களிடம் மாறாத காயமாக அப்படியே இருக்கிறது. இதனால் மீண்டும் இந்த முறை உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்தை சந்திப்பது குறித்து ஒருவித அச்சம் காணப்படுகிறது.

இதுகுறித்து இந்திய அணியின் குல்தீப் யாதவ் கூறும் பொழுது “2019 ஆம் ஆண்டு அரையிறுதிப்போட்டி முடிந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. அதற்குப் பிறகு நாங்கள் நிறைய இருதரப்பு தொடர்களில் விளையாடி இருக்கிறோம். மேலும் எங்களுக்கு இந்தியாவில் நிலைமைகள் தெரியும். எங்கள் தயாரிப்பு நன்றாக இருக்கிறது. நாங்கள் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம்.

எனவே நாங்கள் நியூசிலாந்துக்கு எதிராகவும் இதே போக்கிலேயே விளையாடுவோம். நான் என்னுடைய ரிதம் மற்றும் என்னுடைய பலத்தில் வேலை செய்கிறேன். பேட்ஸ்மேன்கள் என்னை எப்படி விளையாட முயற்சிக்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்துகிறேன். பந்தை பெரும்பாலும் குட் லென்த்தில் வீச முயற்சி செய்கிறேன்.

நான் விக்கெட்டை எடுப்பதுடன் என்னுடைய செயல்பாட்டில் மட்டுமே குறிக்கோளாக இருக்கிறேன். அடுத்த போட்டியிலும் இது தொடரும் என்று நம்புகிறேன். அவர்களின் முதல் இரண்டு விக்கெட்டுகளை சீக்கிரத்தில் கைப்பற்றினால் ஆட்டத்தை கைக்குள் கொண்டு வர முடியும்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -